ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபலம்.. அச்சச்சோ அவரா பயங்கரமானவர் ஆச்சே.. தரமான சம்பவம் தான்

சென்னை: கூலி படத்தை முடித்த கையொடு ஜெயிலர் 2 படத்தில் இணைந்திருக்கிறார் ரஜினிகாந்த். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிடிப்பு படு ஸ்பீடாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னை மற்றும் கேரள பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்கட தேசத்தில் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் முக்கியமான ஹீரோ ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அறிந்த பலரும் அச்சச்சோ அவரா பயங்கரமானவர் ஆச்சே என்றும் கதைக்க தொடங்கிவிட்டனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் மற்றும் மோகன் லால் ஆகியோர் கேமியோ ரோலில் வந்து கைதட்டல்களை பெற்று சென்றனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினி கரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது. ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்தாதகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து நெல்சன் - ரஜினி காம்போவில் மீண்டும் உருவாகும் ஜெயிலர் 2 1000 கோடியை தாண்டிய வசூலை பெறும் என்ற நம்பிக்கையை பெற்றிருக்கிறது.

telugu-actor-balakrishna-to-star-alongside-rajinikanth-in-jailer-2

கேரளாவில் படப்பிடிப்பு: அண்மையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா சென்றிருந்த ரஜினிகாந்திற்கு அம்மாநில சினிமா ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பேது ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பின்னர் சென்னை திரும்பிய அவர் ஜெயிலர் 2 படத்தின் முக்கியமான அப்டேட்டுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். படப்பிடிப்பு கேரளாவில் முடிந்துவிட்டதாகவும் அடுத்து ஹைதராபாத் செல்ல இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். விறுவிறுப்பாக நடந்து வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்குள் முடிந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

பாலையா: ஜெயிலர் முதல் பாகத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் போன்று பிற மொழி நடிகர்களும் ரஜினி படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது சாதாரண படங்கள் கூட பான் இண்டியா படமாகவே எடுக்கப்படுகிறது. அதே பாணியில் ஜெயிலர் 2 படம் எடுக்கப்படுவதால் இப்படத்தின் மூலம் மற்ற நடிகர்களுக்கும் தமிழ் மொழியில் ரீச் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு இணையான கதாப்பாத்திரம் என்றும் கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சிரஞ்சீவியிடம் கேட்ட போது நடிக்க மறுத்தவிட்டாராம். அதன் பின்னர் பாலையாவிடம் கேட்டபோது அவர் ஓகே சொல்லிவிட்டாராம். ரஜினி படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

telugu-actor-balakrishna-to-star-alongside-rajinikanth-in-jailer-2

தமன்னா: ஜெயிலர் முதல் பாகத்தினை போன்றே இப்படத்திலும் ஒரு ஐட்டம் சாங் பாடல் இடம்பிடிக்கிறதாம். காவாலா பாடலை போன்றே இப்பாடலும் உருவாகியிருக்கிறதாம். இப்பாடலுக்கு அதே தமன்னா டான்ஸ் ஆட இருக்கிறாராம். ஜெயிலர் 2 விலும் சிறிய கதாப்பாத்திரத்தில் தமன்னா நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் சிலை கடத்தலை பற்றி எடுத்திருந்தார் நெல்சன். ஜெயிலர் 2 விலும் அந்த சிலை கடத்தலை மையமாக வைத்துதான் கதையே உருவாகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X