அய்யோ கடவுளே.. சாகுற வயசா இது.. சாலை விபத்தில் உயிரிழந்த நடிகர்!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சாலை விபத்தில் 31 வயதான நடிகர் பரத் காந்த் மற்றும் ஒளிப்பதிவாளர் சாய் த்ரிலோக் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் நடிகரான பரத் காந்தின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Telugu Actor Death

இளம் நடிகரான பரத் காந்த் 'Tenant' மற்றும் 'Gramam' உள்ளிட்ட சில தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் மேரேஜ் பேச்லர், மச்சினிச்சி வந்த நேரம், ஆட்டோ லவ் என பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று (மே 10)ந் தேதி ஆதிபாட்லா அருகே உள்ள வெளிவட்டச் சாலையில் தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான சாய் த்ரிலோக்குடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் காட்டுப்படை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது மோதி உள்ளது. கார் திடீரென மோதியதில் சரக்கு லாரியின் பின் சக்கரங்கள் கழன்று விழுந்ததால். கார் பலத்த சேதமடைந்துள்ளது.

சாலை விபத்து: இதில், காரை ஓட்டி சென்ற நடிகர் பரத் காந்த் மற்றும் சாய் த்ரிலோக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடைசி பதிவு: 31 வயதான பரத் காந்த், ஒரு நடனக் கலைஞராகவும், நடிகராகவும் இணைய உலக ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டவராக உள்ளார். இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 40,000 பேர் பின்தொடர்கின்றனர். நடிகர் பரத் காந்த் விபத்தில் உயிரிழந்த செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பரத் காந்த் கடைசியாக தனது இன்ஸ்டாகிராமில் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து "நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.. நீ அவ்வளவு அழகு" பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்து பலர் கண்கலங்குகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X