அறிகுறியே இல்லையாம்.. இன்னொரு டிவி நடிகருக்கும் கொரோனா.. பீதி கிளப்ப வேண்டாம் என்று கோரிக்கை!
ஐதராபாத்: தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர், சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

நா பேரு மீனாட்சி
தெலுங்கு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அம்மாநில அரசு, முன் அனுமதி அளித்ததை அடுத்து, சில தொடர்களின் ஷூட்டிங் தொடங்கியது. ஒரு டிவி சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அதில் நடித்த போட்டு பிரபாகர் என்ற நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்தப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 'நா பேரு மீனாட்சி' என்ற சீரியலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

கொரோனா பாதிப்பு
அதில் நடிகை நவ்யா சுவாமியும் கலந்துகொண்டார். இவர் தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி தொடர்களிலும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்ட இவருக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். சோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பரத்வாஜ் ரங்கவாஜூலா
இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அவருடன் ஜோடியாக நடித்த ரவி கிருஷ்ணா என்ற நடிகருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மற்றொரு டிவி நடிகர் பரத்வாஜ் ரங்கவாஜூலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பீதி ஏற்படுத்தவேண்டாம்
இதுபற்றி கூறியுள்ள அவர், நான் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தேன். எப்படி இந்த தொற்று எனக்கு பரவியிருக்கும் என்பது பற்றி யோசித்து நேரத்தை செலவிட வேண்டாம். எதிர்மறை எண்ணத்தையும் பீதியையும் ஏற்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு தன்னோடு பந்தம், ஸ்வாதி சுனுக்குளு தொடர்களில் நடித்தவர்களும் கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











