ChandraMohan Passes Away: மூத்த நடிகர் சந்திரமோகன் மறைவு… அதிர்ச்சியில் திரைத்துறை!

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார் அவருக்கு வயது 82. இவரது மறைவு தெலுங்கு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

1966ம் ஆண்டு ரங்குலா ரத்னம் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சந்திர மோகன், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் கிட்டத்தட்ட 932க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Telugu actor Chandra Mohan passes away at Hyderabads Apollo Hospital

இவர், தமிழில் வெளியான நாளை நமதே படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்திருந்தார். அதே போல நீயா படத்திலும் கமலின் நண்பனாக நடித்திருந்தார்.

விருதுகள்: 2 நந்தி விருதையும், 1987ம் ஆண்டு சந்தமாமா ராவே விருதை அதானொக்கடே படத்திற்காக பெற்றார். மேலும் படஹரெல்லா வயசு படத்திற்காக பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். இவர் கடைசியாக ஆக்ஸிஷன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை

நடிகர் சந்திர மோகன் திடீர் மறைவு: இந்நிலையில், நடிகர் சந்திர மோகன் மாரடைப்பு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த நடிகரின் இழப்புக்கு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Telugu actor Chandra Mohan passes away at Hyderabads Apollo Hospital

ஜூனியர் என்டிஆர் இரங்கல்: நடிகர் ஜூனியர் என்டிஆர், அகால மரணம் அந்த நடிகர் சந்திர மோகனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பல தசாப்தங்களாக திரைப்படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தைப் பெற்ற சந்திரமோகனின் அகால மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

மறக்க முடியாத நடிப்பு: அதே போல, நடிகர் சாய் தேஜ் தரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவரது மறக்கமுடியாத நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு முறையும் நம் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துகிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சந்திரமோகன் சார். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X