குடிபோதையில் என்னை அடித்தார்: விமல் மீது தெலுங்கு நடிகர் போலீசில் புகார்

By Siva

சென்னை: விமல் குடிபோதையில் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக தெலுங்கு நடிகர் அபிஷேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விமல் சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தெலுங்கு நடிகரான அபிஷேக் அதே பகுதியில் தங்கி அவன் அவள் அது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Telugu actor files complaint against actor Vemal

அபிஷேக் விமலை கிண்டல் செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அபிஷேக் ஷூட்டிங் முடிந்து இரவு வீடு திரும்பியபோது விமல் தனது நண்பர்களுடன் அவரை வழிமறித்துள்ளார்.

அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது. விமல் அபிஷேக்கை தாக்கியதில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன் பிறகு அபிஷேக் நேராக விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று விமல் மீது புகார் அளித்துள்ளார். விமல் குடிபோதையில் தன்னை அடித்ததாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.

அபிஷேக்கின் புகாரின்பேரில் போலீசார் விமல் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X