twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிகாலையில் மாரடைப்பு.. பிரபல வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி

    By
    |

    ஐதராபாத்: பிரபல வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 74

    இதனால் தமிழ், தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ஜெயபிரகாஷ் ரெட்டி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்பட ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

     சவால் விட்ட கங்கனாவுக்கு சரமாரி பாதுகாப்பு.. ஷிப்ட் முறையில் 10 கமாண்டோக்கள்.. அமைச்சருக்கு நன்றி! சவால் விட்ட கங்கனாவுக்கு சரமாரி பாதுகாப்பு.. ஷிப்ட் முறையில் 10 கமாண்டோக்கள்.. அமைச்சருக்கு நன்றி!

     சமரசிம்மா ரெட்டி

    சமரசிம்மா ரெட்டி

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிர்வேல் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. வெங்கடேஷ் ஹீரோவாக நடித்த பிரம்மபுத்ருடு என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், பாலகிருஷ்ணாவின் சமரசிம்மா ரெட்டி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

     காமெடி வில்லன்

    காமெடி வில்லன்

    இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்தார். சில படங்களில் காமெடி வேடங்களிலும் காமெடி வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் அனைத்து முன்னணி ஹீரோ படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் ஆஞ்சநேயா படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானார்.

    உத்தமபுத்திரன்

    உத்தமபுத்திரன்

    இதையடுத்து சூர்யாவின் ஆறு, சின்னா, விஜயகாந்தின் தர்மபுரி உள்பட படங்களில் நடித்துள்ளார். தனுஷ், ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன் படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறந்த புகழைப் பெற்று தந்தது. கடைசியாக தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீக்கெவ்வரு என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

     கொரோனா லாக்டவுன்

    கொரோனா லாக்டவுன்

    இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. கொரோனா லாக்டவுன் காரணமாக ஐதராபாத்தில் இருக்காமல், தனது சொந்த ஊரான கர்னூலில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆசிரியராக

    ஆசிரியராக

    அவர் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. பிறகு நடிப்பு ஆசையில் சினிமாவுக்கு வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கர்னூலில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

    English summary
    Well-known actor Jayaprakash Reddy passed away on Tuesday after a heart attack. The actor who hails from Allagadda in Kurnool died in Guntur in Andhra Pradesh. He was 74.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X