NTR30 குறித்து அப்டேட் சொன்ன ஜூனியர் என்டிஆர்.. சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா?
ஐதராபாத் : தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் ஜூனியர் என்டிஆர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதையும் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் JNT30 படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

நடிகர் ஜூனியர் என்டிஆர்
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஏராளமான ரசிகர்களை கொண்டவராக உள்ளவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவரது பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

ஆர்ஆர்ஆர் படம்
இவரது நடிப்பு இவருக்கு ஆஸ்கார் விருதை பெற்றுத் தரும் என்றும் கமெண்ட்ஸ் எழுந்தன. படத்தில் ராம்சரணுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருந்தார் ஜூனியர் என்டிஆர். சுதந்திர காலகட்டத்தை மையமாக கொண்டு உருவான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் 1000 கோடிக்கும் மேற்பட்ட வசூலை பெற்றது.

என்டிஆர் 30 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்ததாக NTR30 படத்தில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் இணையவுள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்தப் படத்தின் பூஜை விரைவில் போடப்பட்டு சூட்டிங் வரும் வரும் மார்ச் 20ம் தேதி துவங்கவுள்ளதாக ஜூனியர் என்டிஆர் தனது சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2024 ஏப்ரல் 5ல் ரிலீஸ்
அனிருத் இசையமைக்கவுள்ள ஜூனியர் என்டிஆரின் 30வது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாகவும் தற்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுடன் ஜூனியர் என்டிஆர் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூனியர் என்டிஆருக்கு பிடித்த இயக்குநர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்டிஆர், இயக்குநர் வெற்றிமாறனின் படங்கள் தனக்கு பிடிக்கும் என்றும் அவரது அசுரன் படம் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே, தற்போது வெற்றிமாறனுடன் அவர் கூட்டணி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூனியர் என்டிஆருடன் கூட்டணி
தற்போது விடுதலை படத்தின் சூட்டிங்கை வெற்றிமாறன் முடித்துள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ஜூனியர் என்டிஆரை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தன்னுடை NTR30 படத்தை ஜூனியர் என்டிஆர் நிறைவு செய்யவுள்ளார்.


Click it and Unblock the Notifications











