விஜய், தனுஷ் உடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.. பிரபல தெலுங்கு நடிகர் கிரீன் சிக்னல்!

சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரன் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது

இந்த நிலையில் இனிவரும் காலங்களில் பான் இந்திய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில் தனுஷ் மற்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்

பான் இந்திய திரைப்படமாக

பான் இந்திய திரைப்படமாக

பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்த மொழி என்ற தடுப்புச் சுவர்களை நொறுக்கி பான் இந்திய படங்களாக இயக்குனர்கள் தங்களது ஒவ்வொரு படங்களையும் உருவாக்கி வருகின்றனர் குறிப்பாக இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்திய திரைப்படங்களாக வெளியாகிறது. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழ் நடிகர்கள் நடிக்கும் பெரும்பான்மை திரைப் படங்களும் இப்போது பான் இந்திய திரைப்படங்களாக தான் வெளியாகிறது. அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

இரண்டு முன்னணி ஹீரோக்களை

இரண்டு முன்னணி ஹீரோக்களை

பாகுபலி என்ற பிரமாண்ட சரித்திரப் படத்தை கொடுத்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அதைத் தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற மற்றுமொரு பிரமாண்ட படத்தை கொடுத்தார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என்ற இரண்டு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கியிருந்தார். மிகச் சமீபத்தில் இந்த ஆர்ஆர்ஆர் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது. தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் நேரடியாக சென்று ஆதரவு திரட்டினார். அதன் பலனாக அனைத்து மொழிகளிலும் இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது

மகாபாரதம் இயக்க வேண்டும்

மகாபாரதம் இயக்க வேண்டும்

இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் பட விழாவில் பேசிய நடிகர் ஜூனியர் என்டிஆர் இப்பொழுது தமிழ் தெலுங்கு படங்கள் என்றெல்லாம் இல்லை எல்லாமே பான் இந்திய படங்களாக வெளியாகின்றன அது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து மொழிகளிலும் இருக்கும் நடிகர்களையும் சேர்த்து வைத்து ராஜமௌலி மகாபாரதம் கதையை இயக்க வேண்டும்.

இணைந்து நடிக்க ஆவலாக

இணைந்து நடிக்க ஆவலாக

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த நிலையில் இனிவரும் காலங்களில் பான் இந்திய படங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் எனவே நான் தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக தனுஷ், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X