கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன்.. என் காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்.. பிரபல நடிகர் திடுக்!

Recommended Video

Telugu Actor Manchu Manoj Confirms Divorce with Wife Pranathi Reddy

சென்னை பிரபல தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு தனது காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். நடிகர் மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு என்ற இரண்டு மகன்களும் லக்ஷ்மி மஞ்சு என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவரின் மகன் மனோஜ் மஞ்சு தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தனது காதலியான பிரணிதியை திருமணம் செய்தார்.

மனக்கசப்பு

மனக்கசப்பு

இனிமையாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

நீண்ட நாட்களாய்..

நீண்ட நாட்களாய்..

இதுதொடர்பாக இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த மனோஜ் மஞ்சு, தற்போது டிவிட்டர் வாயிலாக தான் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் நீண்ட நாட்களாய் உங்களுடன் பகிர விரும்பினேன், கடைசியாக இன்று சொல்கிறேன் என கூறியுள்ளார்.

சட்டப்படி முறித்துக்கொண்டோம்

சட்டப்படி முறித்துக்கொண்டோம்

மேலும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், என்னுடைய கேரியரிலிலும் ஏற்பட்ட சில மேம்பாடுகளை பகிர விரும்புகிறேன், கனத்த இதயத்துடன் இதனை தெரிவிக்கிறேன், அதாவது நான் விவாகரத்து பெற்றுவிட்டேன். நன்றாக நேசித்த அழகான உறவை சட்டப்படி முறித்துக்கொண்டோம்.

ஆதரவு வேண்டும்

ஆதரவு வேண்டும்

எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வலி காரணமாக நாங்கள் பிரிய முடிவு செய்துதோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடனும், அக்கறையுடனும் இருந்தோம். எங்களுடைய முடிவுக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

குடும்பத்தினர் ஆதரவு

குடும்பத்தினர் ஆதரவு

என் மனம் சரியான இடத்தில் இல்லாமல் இருந்ததால் வேலையில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனை கடந்து வந்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் என்னால் அதனை செய்திருக்க முடியாது. குறிப்பாக என்னுடைய நண்பர்களும் ரசிகர்களும் நான் இல்லாத போதும் எனக்காக நின்றார்கள்.

ஆதரவை தொடர வேண்டும்

என் கஷ்டகாலத்தில் எனக்கு ஆதரவாய் இருந்த என்னுடைய ரசிகர்கள் நான் மீண்டும் பழையபடி நடிக்க உள்ளேன் எனக்கு மீண்டும் தங்களின் ஆதரவை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வைரல் பதிவு

வைரல் பதிவு

நடிகர் மனோஜ் மஞ்சுவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மனோஜ் மஞ்சுவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X