மற்றுமொரு மாநாடா.. மன்மதலீலையா?.. இல்ல அதுக்கும் மேலயா?.. நாகசைதன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு!
சென்னை : இயக்குநர் வெங்கட்பிரபு நடிகர் நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபுவின் 11வது திரைப்படமான இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்க உள்ளார்.
நாகசைதன்யாவின் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கீரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார்.

வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். அந்த படத்தில் அஜித் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அஜித் ரசிகர்களுக்கு மங்காத்தா திரைப்படம் ஒரு ஸ்பெஷல் திரைப்படமாகவே அமைந்தது.

மன்மதலீலை
சிம்புவை வைத்து மாநாடு என்ற பெரும் வெற்றியுடன் வந்துள்ளார். மாநாடு திரைப்படதின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில், மன்மதலீலை என்ற இளசுகள் கொண்டாடும் ஒரு திரைப்படத்தை வெளியிட்டார். அந்த படம் ஏப்ரல் 1ந் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை பார்த்த இளசுகள் வெங்கட்பிரபுவை தாறுமாறாக புகழ்ந்து வருகின்றனர்.

முதல் தெலுங்கு படம்
இந்நிலையில், வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைத்தன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும், இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம், இப்படம் பெரிய பட்ஜெட்டில் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

கமர்சியல் படம்
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யாவின் திறமைக்கு தகுந்தபடியும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இக்கதையை உருவாக்கியுள்ளார். முக்கியமான நடிகர்களும், பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களும் சேர்ந்து ஒரு கமர்சியல் எண்டர்டெயினராக, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

மற்றுமொரு மாநாடா?
இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதை அடுத்து வெங்கட் பிரபுவின் தீவிர ரசிகர்கள் மற்றுமொரு மாநாடா? இல்லை , மன்மதலீலையா? இல்ல அதுக்கும் மேலயா என கேட்டு வருகின்றனர். மேலும் முதன் முதலாக தெலுங்கில் கால் பதிக்கும் வெங்கட்பிரபுவுக்கு பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











