நொந்துபோன மனுஷனா மேலும் நோகடிக்கலாமா? இன்டர்வெலில் வந்த அந்த காட்சி..வெளியேறிய நாகசைத்தன்யா!
சென்னை: நடிகர் நாக சைத்தன்யா சமந்தாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரை மேலும் நோக அடிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் ஜோடியாக வாழ்ந்து வந்த இவர்கள்.

பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்தை பெற்றுவிட்டனர்.
நடிகை சமந்தா: விவாகரத்திற்கு பின் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா, அதில் இருந்து வெளிவர கோவில் கோவிலாக சென்றார். இதையடுத்து, படங்களில் மீது கவனத்தை திருப்பிய சமந்தா, யசோதா, சாகுந்தலம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தார்.
அரியவகை நோய்: இந்த நேரத்தில் தான் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நோய்க்கு வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருக்கிறார். தற்போது, இவர் விஜயதேவர கொண்டாவுடன் இணைந்து குஷிப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

கடுப்பான நாக சைதன்யா: இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா, பாய்ஸ் ஹாஸ்டல் என்ற படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, இன்டர்வெலில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த குஷி படத்தின் டிரைலர் ஒளிபரப்பாகி உள்ளது. இதைப்பார்த்து கடுப்பான நாக சைதன்யா தியேட்டரை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
நொந்து போன மனுஷன்: குஷி படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். இதைப்பார்த்து கடுப்பாகி விட்டாரா இல்லை, வேறு ஏதேனும் வேலை இருந்ததா என்று தெரியவில்லை. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள், ஏற்கனவே நொந்துபோன மனுஷன மேலும் நோக அடிக்கலாமா? என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











