3வது மனைவியை பழிவாங்க பக்கா பிளான் .. காதலியுடன் ரொமான்ஸ் படம் எடுத்த தெலுங்கு நடிகர்!
சென்னை : மூன்றாவது மனைவியை பழிவாங்க புது காதலியுடன் இணைந்து ரொமான்ஸ் படத்தை தயாரித்துள்ளார் தெலுங்கு நடிகர் நரேஷ்.
மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் பொருத்தம், நெஞ்சத்தை அள்ளித்தா, மாலினி 22 பாளையங்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் : நரேஷ் பாபு மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நவீன் விஜயகிருஷ்ணா என்ற மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனையடுத்து ரேகா சுப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேஜா என்ற மகன் இருக்கிறார். ஆனால் இவரையும் விவாகரத்து செய்தார் நரேஷ் பாபு.
3வது திருமணம் : அதன்பிறகும் தனது 50ஆவது வயதில் மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ரம்யாவுக்கும், நரேஷுக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் நரேஷ் பாபு இவரையும் விவாகரத்து செய்துவிட்டு, கன்னட நடிகையான பவித்ரா லோகேஷூடன் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வருகிறார்.

மல்லி பெல்லி : புத்தாண்டு அன்று இருவரும் திருமணம் செய்து கொள்வது போல வீடியோ வெளியானது. ஆனால்,இவர்கள் உண்மையில் திருமணம் செய்து கொள்ளவில்லை மல்லி பெல்லி திரைப்படத்திற்கான ப்ரோமோ என்று கூறப்பட்டது. இதையடுத்து, இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அழகான ரொமான்ஸ் காட்சிகளுடன் காதல் படமாக இப்படம் உருவாகி உள்ளது.
மே 26 ரிலீஸ் : 'மல்லி பெல்லி படத்தை பிரபல தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ இயக்கி உள்ளார். இப்படத்தில், அனன்யா நாகெல்லா, ரோஷன், ரவிவர்மா, அன்னபூர்ணா, பத்ரம், யுக்தா, பிரவீன் யண்டமுரி, மது ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் மே 26ந் தேதி வெளியாக உள்ளது. மல்லி பெல்லி படம் நரேஷின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மனைவியை பழிவாங்கவா? இந்த படத்தில் தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதியை பழிவாங்க, 15 கோடி ரூபாய் செலவில் புது காதலியான பவித்ரா லோகேஷுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து நடித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சினிமா என்பது பொழுதுபோக்கு, இதற்காக 15 கோடி ரூபாயை செலவு செய்து பழிவாங்க முடியாது என பதிலளித்தார். எது எப்படியோ, இந்த படத்தை நரேஷ்,பவித்ராவின் ரொமான்ஸ் காட்சியை பார்த்தால், அவரது மனைவி நிச்சயம் டென்ஷன் ஆகத்தான் செய்வார்.


Click it and Unblock the Notifications











