Don't Miss!
- Lifestyle
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- News
முதல்வர் ஆய்வு.. ராணிப்பேட்டை எஸ்பி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
- Automobiles
இனி இந்த கார்களை வாங்கின மாதிரிதான்! இத செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டாங்களா? புலம்பும் மக்கள்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
60 வயதிலும் அடங்காத ஆசை..4வது திருமணத்திற்கு ரெடியான நரேஷ்..கணவனுடன் மல்லுகட்டும் 3வது மனைவி!
சென்னை : தெலுங்கு நரேஷ் பாபு நான்காவதாக நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் 3வது மனைவி ரம்யா ரகுபதி திருமணத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் மகேஷ் பாபுவின் சகோதரும் ஆன நரேஷ் பாபு ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் நரேஷ், புத்தாண்டு அன்று நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொள்ள இருப்பமாக கூறி லிப் கிஸ் கொடுத்து வீடியோவை ஷேர் செய்திருந்தார்.
பிரபல நடிகையை நான்காவதாக திருமணம் செய்யும் நடிகர்..லிப் லாக் கொடுத்து செம ரொமான்ஸ்!

செருப்படி வாங்கி நரேஷ்
நடிகர் நரேஷ் மற்றும் நடிகை பவித்ரா லோகேஷ் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இருவரும் ஓட்டல் அறை ஒன்றில் இருந்த போது நடிகர் நரேஷின் 3வது மனைவி ரம்யா ரகுபதி, ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து மீடியாக்கள் முன் செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தினார்.

ஓரே வீட்டில்
இந்த சம்பவத்திற்கு பிறகு, நரேஷ், ரம்யா ரகுபதி விட்டு பிரிந்து வாழ்த்து வருகிறார். அதன் பின் நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கிருஷ்ணாவின் பிறந்த நாள் விழாவிலும், பவித்ரா குடும்பத்தில் ஒருவர் போல கொண்டார்.

உதட்டில் முத்தம்
இதையடுத்து, புத்தாண்டு அன்று புதிய ஆண்டு...புதிய தொடக்கம்... உங்களின் வாழ்த்துக்கள் தேவை என்ற கேப்ஷனுடன், கேன்டில் லைட்டில் ஒருவருக்கு ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டு தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இது சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

3வது மனைவி ரம்யா ரகுபதி
இந்நிலையில், நரேஷ் பாபுவின் 3வது மனைவியான ரம்யா ரகுபதி அளித்துள்ள பேட்டியில், 60 வயதான நரேஷிற்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இதில் முதல் இரண்டு மனைவிகளிடமிருந்து அவர் விவாகரத்து பெற்று என்னை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த வயதில் 4வது திருமணமா?
எனக்கும் அவருக்கும் இன்னும் விவாகரத்தாகத நிலையில் எப்படி நான்காவதாக திருமணம் செய்து கொள்ளமுடியும். இந்த வயதில் நான்காவது திருமணம் கேட்குதா என்றும், என் மகனுக்கு அப்பா தேவை என்பதால், நான் நிச்சயம் நரேஷ் பாபுவுக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன், திருமணமும் செய்யவிடமாட்டேன் என்று கூறியுள்ளார். 3வது மனைவி ரம்யாவின் இந்த பேட்டியால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.