ரஜினி, விஜய்க்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகர்... ஒருநாள் சம்பளம் மட்டும் 2 கோடி!
ஹைதராபாத்: கோலிவுட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் நால்வருமே 100 கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
அதேபோல், தெலுங்கு திரையுலகிலும் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் NTR போன்ற நடிகர்கள் பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபாஸ், அல்லு அர்ஜுன் ஆகியோரை விடவும் பவன் கல்யாண் அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண், மொத்தமே 30 படங்கள் வரை நடித்துள்ளார்.

டோலிவுட் பவர் ஸ்டார்
பாலிவுட், கோலிவுட் வரிசையில் வணிக ரீதியாக மிகப் பெரிய சினிமா இண்டஸ்ட்ரியில் டோலிவுட்டும் அடங்கும். படங்களின் பட்ஜெட், வசூல், நடிகர்களின் சம்பளம் எல்லாமே கோடிகளில் தான் நடைபெறுகின்றன. இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டாரான பவன் கல்யாணின் சம்பளம் குறித்த தகவல் திரையுலகையே அதிரச் செய்துள்ளது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி தான் இந்த பவன் கல்யாண்.

பல கோடி ரசிகர்கள்
1996ல் வெளியான அக்கடா அம்மாயி இக்கடா அப்பாயி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பவன் கல்யாண். சத்யநாராயணா இயக்கிய இந்தப் படம் பவன் கல்யாணுக்கு தரமான என்ட்ரியாக அமைந்தது. அதேபோல், அவர் நடிப்பில் அடுத்து ரிலீஸான தோலி பிரேமா, 1998ம் ஆண்டுக்கான சிறந்த தெலுங்கு மொழி படத்துக்கான தேசிய விருதை வென்றது. இதனால், பவன் கல்யாணின் மார்க்கெட் செம்ம ஹைப்பில் சென்றது.

ஒருநாள் சம்பளம்
தொடர்ந்து பத்ரி, குஷி, சங்கர் தாதா எம்.பி.பி.எஸ், ஜல்சா, சர்தார் கப்பார் சிங், வக்கீல் சாப், பீம்லா நாயக் என 30 படங்கள் வரை நடித்துள்ளார். ஆக்ஷன் ஜானர் படங்களாக தட்டித் தூக்கும் பவன் கல்யாண், நடிகராக மட்டும் இல்லாமல் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் பயணித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பவன் கல்யாண், படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மொத்த சம்பளம்
ஒருநாளைக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் என்ற கணக்கில், சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்க 75 கோடி வாங்கியுள்ளாராம். 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்ததற்கே 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மச்சிலிபட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண் தான் அவரது சம்பளம் பற்றி தெரிவித்துள்ளார். "நான் சினிமாவில் நடித்து நிறைய சம்பாதிக்கிறேன். குறிப்பாக ஒருநாள் நடிப்பதற்கு ரூ.2 கோடி வாங்குகிறேன். அதேபோல் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்தேன்" என அதிரடியாக கூறியுள்ளார்.

டோலிவுட்டில் சர்ச்சை
பவன் கல்யாண் சொல்வதை வைத்து பார்த்தால், ரஜினி, கமல், விஜய், அஜித், அல்லு அர்ஜுன் ஆகியோரை விடவும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக அவர் தான் காணப்படுகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் தனது புதிய படத்துக்கு 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கே தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது பவன் கல்யாண் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











