ரூ.100 கோடி வசூலை நெருங்கும் பவன் கல்யாணின் ப்ரோ..டோலிவுட்டில் மாஸ் காட்டிய சமுத்திரக்கனி!

ஹைதராபாத்: Bro movie box office (ப்ரோ பாக்ஸ் ஆபிஸ் வசூல்) பவன் கல்யாண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள ப்ரோ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரக்கனி நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த படத்திற்கு பின் போராளி, நிமிர்ந்து நில், அப்பா மற்றும் தொண்டன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

Telugu actor Pawan Kalyan star bro movie box office collection

வினோதய சித்தம்: இந்த வரிசையில் சமுத்திரகனி இயக்கத்தில் வினோதய சித்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது. இப்படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வினோதய சித்தம் திரைப்படம் தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்திற்கு திரிவிக்ரம் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.

ப்ரோ: தமிழில் சமுத்திரக்கனி நடித்த கேரக்டரில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடித்துள்ளனர். மேலும், பிரியா பிரகாஷ் வாரியர், கெட்டிகா ஷர்மா, பிரம்மானந்தம், சுப்பராஜு, ரோகினி மற்றும் தனிக்கெல்லா பரணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபாக்டர் மற்றும் ZEE ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பு செய்திருக்கும் ப்ரோ திரைப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

Telugu actor Pawan Kalyan star bro movie box office collection

ரூ.100 கோடி வசூல்: ஜூலை 28ஆம் தேதி வெளியான ப்ரோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் 27 கோடியும், இரண்டாம் நாளில் 25 கோடியும் வசூலித்துள்ள இத்திரைப்படம் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணைய உள்ளது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் பவன் கல்யாணின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மாஸ் காட்டும் சமுத்திரக்கனி: இயக்குனர் மற்றும் நடிகர் என மிகச் சிறப்பாக பணியாற்றி வரும் சமுத்திரக்கனி, இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மாஸ் காட்டி வரும் சமுத்திரக்கனி இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X