50 வயது நடிகையுடன் காதலா? இதெல்லாம் ரொம்ப தப்புங்க..கடுப்பான நடிகர் !
சென்னை :50 வயது நடிகையை காதலிப்பதாக பரவிய வதந்திக்கு நகைச்சுவை நடிகர் விளக்கம் கொடுத்துள்ளார்.
சகலாகலா வல்லவன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை துளசி, தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அம்மா கேரக்டரில் நடித்தாலும், வயசு ஆனாலும் அழகு இன்னும் உன்னைவிட்டு போகல என்ற வசனம் இவருக்கு கச்சிதமாக பொருந்தும். அந்த அளவுக்கு தற்போதும் இவர் இளமையுடன் இருக்கிறார்.

நடிகை துளசி : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழில்களின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது படவாய்ப்பு இல்லாததால், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பிரபாஸ் ஸ்ரீனுவுடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஓராண்டுக்கும் மேலாக வருகிறது.
காதல் வதந்தி : இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் துளசி, பிரபாஸ் ஸ்ரீனுவை அன்போடு டார்லிங் டார்லிங் என்று அழைப்பார் இதைப்பார்த்த பலர் கண்ணு காது மூக்கு வைத்து இருவரும் காதலிப்பதாக கதையை பரப்பிவிட்டனர். இது குறித்து இதுவரை பிரபாஸ் ஸ்ரீனு, துளசி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
அம்மா போன்றவர் : இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் பிரபாஸ் ஸ்ரீனு, இணையத்தில் பரவி வரும் இந்த வதந்தி குறித்து பேசி உள்ளார். அதில் வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இதுபோன்ற வதந்தியை பரப்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. துளசி எனக்கு அம்மா போன்றவர் அவர் படப்பிடிப்பு தளத்தில் என் மீது அக்கறையோடு நடந்து கொள்வார் இது ஒரு அம்மாவுக்கும் மகனுக்குமான உறவு. மேலும் அவர் ஒரு சிறந்த நடிகை. வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
இதெல்லாம் ஒரு செய்தியா : எங்களைப் பற்றி பரவிய வதந்தி என் மனைவிடம் சொன்னேன் இதை கேட்டுவிட்டு சிரித்தார், என் மனைவி மிகவும் பக்குவமானவர் என்னை பற்றி நன்றாக அவருக்கு தெரியும் எனவே இதுபோன்ற வதந்திகளை அவள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள் என்று தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்ரீனு காதல் வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











