படப்பிடிப்பில் விபத்து.. 3 மணி நேரம் ஆப்ரேஷன்.. தெலுங்கு நடிகர் ராஜசேகருக்கு என்னாச்சு!

சென்னை: பிரபல நடிகர் ராஜசேகர் படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கணுக்காலில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் நடிகரான ராஜசேகர் தமிழில் புதுப்பெண் படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். அதே போல தெலுங்கில் இவர் நடித்த Magadu என்ற படம் தமிழில் "இதுதான்டா போலீஸ்" என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் ராஜசேகர்.

Rajashekar leg injury

தெலுங்கு நடிகர் ராஜசேகர்: இவர், நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா ஆகியோரும் தமிழ், தெலுங்கில் பிரபல நடிகைகளாக உள்ளனர்.பிரஷாந்த் வர்மா இயக்கும் 'கல்கி' படத்தை சி. கல்யாண், ஜீவிதா ராஜசேகர், மற்றும் ஷிவானி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தக் காயத்தால் படப்பிடிப்புத் திட்டம் தற்காலிகமாகத் தாமதமானது. தற்போது நடிகர் ராஜசேகர் நன்றாக குணமடைந்து வருகிறார்; அவர் முழுமையாக குணமடைந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மணி நேரம் ஆப்ரேஷன்: 63வயதாகும் ராஜசேகர் தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற லப்பர் பந்து தெலுங்கு ரீமேக்கில் முக்கிய வேடத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ண்டைக் காட்சியை படமாக்கியபோது அவரது கணுக்காலில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள சிட்டி நியூரோ சென்டரில், டாக்டர் சூர்யபிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழு 3 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ராஜசேகரின் கணுக்காலில்ஏற்பட்ட எலும்பு முறிவுகளை சரிசெய்ய, (ORIF) செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் முழுமையாக குணமடைய 5 முதல் 6 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கைவசம் உள்ள படம்: படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் ராஜசேகர் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என வலியைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி உள்ளார். ஆனால், ஒரு கட்டத்தின் ராஜசேகரின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது மனைவி ஜீவிதா மற்றும் மகள்கள் ஷிவானி மற்றும் ஷிவத்மிகா ஆகியோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நடிகர் ராஜசேகர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடித்த 'வக்கந்தம் வம்சியின் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஷர்வானந்துடன் அபிலாஷ் ரெட்டி கன்காராவின் 'பைக்கர்' நடித்துள்ளார்.இப்படம் டிசம்பர் 11ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படங்கள் மட்டுமில்லாமல், இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X