Kalki 2898 AD: ராஜசேகர் படமா? பிரபாஸ் படமா? குழம்பி ஏமாந்த ரசிகர்கள்!

சென்னை: இந்த ஆண்டு ரசிகர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உள்ளது கல்கி 2898 AD. பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே லீட் ரோலில் நடித்திருக்கும் இத்திரைப்படம் 27ந் தேதி வெளியாக உள்ளது. அதே போல தெலுங்கு நடிகர் ராஜசேகர் திரைப்படமும் அந்த தேதியில் ரீ ரிலீஸ் ஆவதால், ராஜசேகரின் 'கல்கி' படத்தை பிரபாஸ் படம் என்று தவறாக நினைத்து ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி குவித்துள்ளனர். இதனால், அந்த படம் ஹவுஸ்ஃபுல்லாகி உள்ளது.

தெலுங்கில் மகாநடி உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி உள்ள திரைப்படம், 'கல்கி 2898 AD'. இதில், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Kalki 2898 AD Prabhas Rajashekar

கல்கி 2898 AD: தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாக இருப்பதால் இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு பிரம்மாண்டமாக செய்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கதாபாத்திர அறிமுகம் கோலாகலமாக நடந்தது. அதில், பிரபாஸும் கலந்து கொண்டு, 'கல்கி 2898 AD' முக்கிய கதாபாத்திரமான புஜ்ஜி ரோபோவை அறிமுகப்படுத்தினார். புஜ்ஜியின் கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

கர்ப்பிணியாக தீபிகா படுகோனே: கமலின் ரோல்: 'கல்கி 2898 AD' படத்தில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள நெமாவார், நர்மதா காட் என்ற இடத்தில் நடைபெற்றது. லீட் ரோலில் நடிக்கும் தீபிகா படுகோனே இப்படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார். மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவரது கதாபாத்திரம் பற்றிய எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.

எனக்கு சம்மந்தம் இல்ல: இந்நிலையில், தெலுங்கு நடிகர் ராஜசேகர் நடித்த 'கல்கி' படத்தை பிரபாஸ் படம் என தவறாக நினைத்துக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். ராஜசேகரின் 'கல்கி' படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்றுத் தீர்ந்து ஹவுஸ்புல்லாகி உள்ளது. இதற்கு ராஜசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அன்பான பிரபாஸ் மற்றும் படக்குழுவினர் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் சரித்திரத்தை உருவாக்குங்கள். திரைப்படத் துறையை ஒரு படி மேலே கொண்டு செல்லுங்கள் என படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜ்சேகரின் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கல்கி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kalki 2898 ad prabhas rajashekar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X