Thalaivar 170: ஆத்தாடி இவரா..தலைவர் 170 படத்தில் அதிரடியாக களமிறங்கிய வில்லன் நடிகர்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தில் பிரபல மாஸான வில்லன் நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் பட்டையை கிளப்பி வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி அவரது 170வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ் பெற்ற டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்க உள்ளார்.

தலைவர் 170: தலைவர் 170 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதையடுத்து, படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக படக்குழு அறிவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரண்டு நாயகிகளின் போஸ்டர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகியான துஷாரா விஜயன் கமிட்டாகி உள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவர், அண்மையில், அர்ஜுன் தாஸ் உடன் அநீதி படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
ரஜினிக்கு ஜோடி: துஷாரா விஜயனை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் இறுதிச்சுற்றுப்பட நடிகை ரித்திகா சிங்கும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் மஞ்சு வாரியரை, இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தனுஷிற்கு ஜோடியாக அசுரன் படத்திலும் அஜித்தின் துணிவு படத்திலும் நடித்திருந்தார்.
ராணா டகுபதி: அதன்படி பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் ராணா டகுபதி இப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் ராணா டகுபதி இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 171: தலைவர் 170 படத்தைத் தொடர்ந்து, ரஜினி காந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 171 படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











