ஒழுங்கா டிரஸ் போடுங்க.. எவனாவது கைவைப்பான்.. நடிகரின் சர்ச்சை பேச்சு.. கண்டித்த சின்மயி!

சென்னை: தெலுங்க நடிகர் சிவாஜி, பிந்து மாதவி, நப்தீப், நந்து ஆகியோர் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள திரைப்படம் தண்டோரா. இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் சிவாஜி, பெண்களின் ஆடை குறித்து பேசியது தற்போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு நடிகர் சிவாஜி, இரண்டு தினங்களுக்கு முன் தண்டோரா கலந்து கொண்டு பேசினார். அதில், பெண் எப்போதும் அழகானவர்கள். புடவை அணிந்து வரும் பெண்களின் அழகே தனி ரகம். உடல் பாகங்கள் தெரியும் படி உடைகள் அணிவது பெண்களுக்கு பிரச்சனையை வரவழக்கும். ஹீரோயின்கள் கண்டபடி ஆடைகளை அணிந்து கொண்டு பொது இடத்திற்கு வந்தால், நீங்கள் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

chinmayi Telugu actor

சர்ச்சை பேச்சு: என்ன இவர் இப்படி பேசுகிறாரே என்று என்னை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. உங்கள் அழகு சேலையில்தானே தவிர, உடல் பாகம் தெரியும்படி ஆடை அணிவதில் இல்லை. பெண்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதரந்திரத்தை புரிந்து கொண்டு, அந்த சுதந்திரத்தை ஆடையில் காட்டி வருகிறார் என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு மேடையில் இருந்த நடிகைகளை காயப்படுத்தியது. பல நடிகைகள் மேடையில் இருக்கும் போதே நடிகர் சிவாஜி இப்படி பேசியதை பலரை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் பேச்சு இணையத்தில் வைரலாகி பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சின்மயி ட்வீட்: இதுகுறித்து பாடகி சின்மயி தனது கண்டனத்தைபதிவிட்டுள்ளார். அதில், பெண்களின் உடை பற்றி பேசும் அந்த நடிகர். "அவரே ஜீன்ஸ் மற்றும் ஹூடி அணிகிறார். அவர் வேட்டி மட்டுமே அணிந்து இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். அவருக்கு திருமணமாகி இருந்தால், திருமணமானவர் என்பதைக் குறிக்க கங்கணம் மற்றும் மெட்டி அணிய வேண்டும். இங்கு பெண்கள் நடத்தப்படும் விதம் நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. உண்மையிலேயே நம்பமுடியவில்லை என்று அந்த பின்னணிப் பாடகி சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அனசுயா: அதே போல, தொகுப்பாளினியும் நடிகையுமான அனசுயா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கருத்தை கடுமையாக கண்டித்துள்ளார். அதில், யார் என்ன உடையணிய வேண்டும் என்று அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், சிவாஜியின் மனநிலையை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் தொகுப்பாளினி அனசுயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X