தியேட்டர்காரர்கள் மிரட்டல்... தெலுங்கு நடிகர் தற்கொலை முயற்சி!

By Staff

Raja and Namitha
தனது படத்தை விரைவில் தூக்கிவிடுவதாக தியேட்டர்காரர்கள் மிரட்டியதால் மனமுடைந்த தெலுங்கு நடிகர் ராஜா தற்கொலைக்கு முயன்றது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமீதாவுடன் ஜெகன் மோகினி தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ராஜா. மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் இவர் பிரபல நடிகராகத் திகழ்கிறார்.

சமீபத்தில் ராஜா நடித்த இன்கோசரி தெலுங்கு படம் ஆந்திராவில் ரிலீசானது.

வெளியான சில தினங்களிலேயே இந்தப் படத்தை தியேட்டர்களிலிருந்து தூக்கி விடப்போவதாக தியேட்டர்காரர்கள் மிரட்டியதாக மனித உரிமை கமிஷனில் ராஜா புகார் செய்தார்.

இந்த மிரட்டலால் அவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டாராம். இந்தப் படம் ஓடாமல் போனால் தனது சினிமா வாழ்க்கை முடங்கிவிடும் என்பதால், திடீரென்று அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை ராஜா நடித்த இன்கோசரி படத்தின் தயாரிப்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

ஆனால் தனது படம் பரபரப்பாக ஓடவேண்டும் என்பதற்காக அவர் சினிமா பாணியில் அடித்த ஸ்டன்ட் இது என்று தெலுங்கு விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X