ஜெயிலரை தொடர்ந்து மார்க் ஆண்டனியில் இணைந்த புஷ்பா வில்லன்... தரமான சம்பவம் காத்திருக்கு

சென்னை: லத்தியை தொடர்ந்து விஷால் அவரது 33வது படமான மார்க் ஆண்டனியில் நடித்து வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா கமிட் ஆகியுள்ளார்.

விஷால், எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள மார்க் ஆண்டனி இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் ஒரு வில்லன் நடிகர் இதில் இணைந்துள்ளார்.

 விஷாலின் மார்க் ஆண்டனி

விஷாலின் மார்க் ஆண்டனி

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனிமி படத்தில் விஷாலுடன் ஆர்யா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வெளியான வீரமே வாகை சூடும் படமும் கலவையான விமர்சனங்களால், ரசிகர்களை கவர முடியாமல் போனது. அதேபோல் லத்தியும் ரிலீஸான வேகத்தில் தியேட்டரில் இருந்து வெளியேறியது. அதேநேரம் அவர் நடித்து வரும் மார்க் ஆண்டனி படம் மீதான எதிர்பார்ப்பு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 ரெட்ரோ ஆக்‌ஷன் விருந்து

ரெட்ரோ ஆக்‌ஷன் விருந்து

மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இதுவரை நடித்திடாத வித்தியாசமான ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன், 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குகிறார். விஷால் மார்க் ஆண்டனியாகவும் எஸ்ஜே சூர்யா ஜாக்கி பாண்டியனாகவும் நடிக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் விருந்து படைக்கும் என சொல்லப்படுகிறது.

 புஷ்பா, ஜெயிலர் வில்லன்

புஷ்பா, ஜெயிலர் வில்லன்

விஷாலுக்கு வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யா, மார்க் ஆண்டனி படத்தின் கதையை ரொம்பவே பாராட்டியிருந்தார். "இப்படியொரு கதையை கேட்ட பிறகு என்னால் இந்தப் படத்தில் நடிக்காமல் இருக்க முடியாது. இனிமேல் எனக்கு இப்படி ஒரு கேரக்டர் கிடைக்குமா எனத் தெரியவில்லை" எனக் கூறியிருந்தார். எஸ்ஜே சூர்யா இப்படி பேசியிருந்தது 'மார்க் ஆண்டனி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. கேங்ஸ்டர் பின்னனியில் உருவாகும் இந்தப் படத்தில் மேலும் ஒரு வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. புஷ்பா படத்தில் மங்களம் சீனுவாக நடித்த சுனில் தான் அவர்.

 மிரட்டும் சுனில் போஸ்டர்

மிரட்டும் சுனில் போஸ்டர்

புஷ்பா படத்தில் மங்களம் சீனுவாக மிரட்டிய சுனில், தற்போது ரஜினியுடன் ஜெயிலரில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தான் மார்க் ஆண்டனியிலும் சுனிலை புக் செய்துள்ளது படக்குழு. மேலும் அவருக்கான போஸ்டரையும் வெளியிட்டு கோலிவுட்டை பரபரக்க வைத்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் வில்லன் நடிகர் சுனிலும் இணைந்துள்ளதால் ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். விரைவில் அவரது கேரக்டர் பற்றிய அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X