அதிர்ச்சி.. கொரோனாவுக்கு பிரபல நடிகர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய தெலுங்கு திரையுலகம்!

சென்னை: கொரோனாவுக்கு பிரபல தெலுங்கு நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உயிரிழப்புகளும் அதிகரிப்பதால், கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநில அரசுகள் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

தெலுங்கு நடிகர் மரணம்

தெலுங்கு நடிகர் மரணம்

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தெலுங்கு நடிகர் மரணமடைந்துள்ளார்.

நடிகர் டிஎன்ஆர்

நடிகர் டிஎன்ஆர்

பிரபல தெலுங்கு நடிகர் திருமலா நரசிம்மா ரெட்டி. டிஎன்ஆர் என அழைக்கப்படும் இவர் சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பிரபலமாக வலம் வந்தார்.

சிகிச்சைப் பலனின்றி மரணம்

சிகிச்சைப் பலனின்றி மரணம்

கடந்த வாரம் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஹைத்ராபாத்தில் உள்ள மால்காஜ்கிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி டிஎன்ஆர் காலமானார்.

பெரும் அதிர்வலைகள்

பெரும் அதிர்வலைகள்

அவரது மறைவுக்கு நடிகர்கள் நானி, விஜய் தேவரகொண்டா, விஷ்ணு மஞ்சு, நடிகை காஜல் அகர்வால் உட்பட தெலுங்கு திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டிஎன்ஆர் மரணம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X