ஒரு நல்ல ஆத்மா நம்மை விட்டுப் பிரிந்தது.. காலமானார் ‘வேதம்’ நாகையா.. நடிகை அனுஷ்கா இரங்கல்!
ஹைதரபாத்: அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடிப்பில் வெளியான 'வேதம்' படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் நாகையா காலமானார். அவருக்கு வயது 77.
தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான வானம் தெலுங்கு திரைப்படமான வேதம் படத்தின் ரீமேக் தான்.
அந்த படத்தில் நடித்து பிரபலமான நாகையா 'வேதம்' நாகையா என்றே அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

‘வேதம்’ நாகையா காலமானார்
தெலுங்கு நடிகர் 'வேதம்' நாகையா வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (சனிக்கிழமை) காலமானார். அவரது மறைவு செய்தியை அறிந்த தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அல்லு அர்ஜுன் படம்
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான வேதம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நாகையா. அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு, யே மாயா சேசாவே, ஸ்பைடர், கமனம், நாகவல்லி என 30 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தெருவில் நடந்த ட்விஸ்ட்
2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான வேதம் படத்திற்காக காஸ்டிங் தேர்வு நடத்திக் கொண்ட நேரத்தில் இயக்குநர் கிரிஷ் பார்வையில் ஐதராபாத்தின் தெரு ஒன்றின் ஓரத்தில் நடந்து கொண்ட தன்னை பார்த்து அலுவலகத்துக்கு வரச் சொன்னார் கிரிஷ். அங்கே ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்த வசனத்தை படிக்க சொன்னதும் படித்து காட்டினேன், உடனே நீங்க தான் நடிக்கிறீங்க என எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இப்படித் தான் நடிக்க வந்தேன் என முன்னதாக பேட்டி ஒன்றில் நாகையா கூறியிருந்தது வைரலானது.

அனுஷ்கா இரங்கல்
நல்ல இதயம் கொண்ட மனிதர் ஒருவர் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நாகையாவ்வின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என வேதம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட டோலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் நாகையாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











