வீட்டில் இருந்தபோது மாரடைப்பு.. பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

By

ஐதராபாத்: மாரடைப்பு காரணமாக, பிரபல நடிகர் திடீரென உயிரிழந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா உலகில் அதிகமான உயிரிழப்புகள் நடந்து வருகின்றனர்.

இது இந்திய திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யதா கிருஷ்ணா

யதா கிருஷ்ணா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பல திறமையாளர்களை இழந்திருக்கிறது சினிமா துறை. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் யதா கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக, இப்போது உயிரிழந்துள்ளார். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சங்கராந்தி அல்லுடு

சங்கராந்தி அல்லுடு

யதா கிருஷ்ணா, தெலுங்கில் சுமார் 20 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். சில படங்களில் கேரக்டர் ரோலிலும் நடித்துள்ளார். கடைசியாக, அவர் ஹீரோவாக நடித்த படம், சங்கராந்தி அல்லுடு. விவிவி சத்யநாராயணா இயக்கி இருந்த இந்தப் படம் கடந்த 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகியிருந்தது.

குப்த சாஸ்திரம்

குப்த சாஸ்திரம்

இதில், சுனாக்‌ஷி, ரகுநாத் ரெட்டி, ரங்கசாமி உட்பட பலர் நடித்திருந்தனர். குப்த சாஸ்திரம், வயசு கோரிகா, பிக்னிக் உட்பட பல பட்ஜெட் படங்களில் நடித்துள்ள இவர், படங்களை தயாரித்ததால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். இதையடுத்து சினிமாவை விட்டு விட்டார்.

திடீரென நெஞ்சுவலி

திடீரென நெஞ்சுவலி

இந்நிலையில், நடிகர் யதா கிருஷ்ணாவுக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 61. இதைக் கண்டு அவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதைக் கேள்விபட்ட தெலுங்கு திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இறுதி அஞ்சலி

இறுதி அஞ்சலி

ஐதராபாத் நிஜாம்பேட்டையில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செய்தனர். பின்னர் இறுதிச் சடங்கு நடந்தது. மறைந்த யதா கிருஷ்ணாவுக்கு மனைவி பெயர் ரமா தேவி. சுரேஷ் லட்சுமண் என்ற இரண்டு மகன்கள், சுஜனா என்ற மகள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X