3வது குழந்தைக்கு கணவர் ஒத்துழைப்பு கொடுக்கல.. பப்ளிக்கா அந்த விஷயத்தை பற்றி பேசிய நடிகை!

சென்னை: தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார் அனுசுயா பரத்வாஜ். தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், மூன்றாவது குழந்தைக்கு கணவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று, பப்ளிக்காக மீடியாவின் முன் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

anasuya bharadwaj pushpa

39 வயதான அனுசுயா பரத்வாஜ் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது சாக்ஷி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். இதைத்தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

anasuya bharadwaj pushpa

அதன்பின்னர் சினிமாவில் நுழைந்த அனுசுயா அண்மையில் மெஹா ஹிட் அடித்த 'புஷ்பா' படத்தில் வில்லியாக நடித்து கலக்கியிருந்தார்.

anasuya bharadwaj pushpa

நடிகை அனுசுயா: அவ்வப்போது தன்னுடைய கிளாமர் போடோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார் அனுசுயா பரத்வாஜ். மம்மூட்டி நடித்த பீஷ்மா பர்வன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர். ரவி தேஜா, கோபிசந்த் மற்றும் கிருஷ்ண வம்சி ஆகியோரின் படங்களில் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல், மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியில் இருந்து தமன்னா விலகிய பிறகு, அந்த நிகழ்ச்சியை அனசுயா சுவாரசியமாக தொகுத்து வழங்கினார். மேலும் 'Prati Roju Pandage' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

anasuya bharadwaj pushpa

புஷ்பா படத்தில்: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்தில் மங்கலம்ரெட்டி மனைவி ரோலில் வில்லி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்த அனுசுயா. இணையத்தில் அவ்வப்போது அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், படுக்கை அறை விஷயம் குறித்து பப்ளிக்காக பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

anasuya bharadwaj pushpa

கணவர் ஒத்துழைக்கல: நடிகை அனுசுயா, 14 ஆண்டுகளுக்கு முன் சுசாங்க் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அனசுயாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருந்த போதும் தனக்கு மூன்றாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு என் கணவர் ஒத்துழைப்பு தரவில்லை. அவர் வேலை வேலை என்று வெளியில் சென்றுவிடுகிறார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், "வாழ்க்கையில் குழந்தை இல்லை என்றால், வாழ்க்கையே வீணாகி விடும், வீடு மகிழ்ச்சியாக இருக்க பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்றார். அனுசுயா பெண் குழந்தைகள் பற்றி பேசி இருந்தாலும், தனிப்பட்ட விஷயம் குறித்து பொது இடத்தில் பேசியதும், அவர் பேசிய விதமும் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

anasuya bharadwaj pushpa

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X