தெலுங்கு நடிகை டிம்பிளுக்குத் தடை!

By Sudha

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது ஆசிட் அடிக்க வைத்த நடிகை டிம்பிள் தொடர்ந்து நடிக்க தெலுங்கு நடிகர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகை டிம்பிள் ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கும் சக டி.வி.நடிகர் ஸ்ரீதர் வர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ஸ்ரீதர் வர்மாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டிம்பிள் வற்புறுத்தினார்.

ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. டிம்பிள் நெருக்கியதால் அவரை விட்டு விலக ஆரம்பித்தார். இது டிம்பிளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால், ஸ்ரீதர் வர்மாவை பழிவாங்க திட்டமிட்டார். கூலிக்கு அடியாட்களை பிடித்து ஸ்ரீதர்வர்மா மீது ஆசிட்டை வீசினார். காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீசிய டிம்பிளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தெலுங்கு டி.வி. சங்கத்தினர் அவசரமாக கூடி டி.வி. தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க டிம்பிளுக்கு தடை விதித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X