ஒன்பதுல குரு.. சென்னையில் கீதா சிங்...!
சென்னை: தெலுங்கு திரையுலகைக் கலக்கி வரும் காமெடிப் புயல் கீதா சிங் தற்போது தமிழையும் கலக்க களம் புகுந்துள்ளார் ஒன்பதுல குரு படம் மூலமாக.
ஒன்பதுல குரு படத்தில் வரும் குண்டு நடிகையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர் படம் பார்த்தபோது. யாருடா இது என்று.
அந்த ஆச்சரிய நடிகையின் பெயர்தான் கீதா சிங். தெலுங்கில் முன்னணி காமெடி நாயகி இவர்.

ஆரம்பம் நாயகியாகத்தான்
இப்போது காமெடியில் கலக்கி்க் கொண்டிருந்தாலும் ஆரம்பத்தில் நாயகியாகத்தான் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தாராம் கீதா சிங். தாசரி நாராயணராவ்தான் இவரையும் முதலில் நடிக்க வைத்தவர்.

திடீரென குண்டான உடம்பு
7 படங்களில் ஹீரோயினாக நடித்து முடித்திருந்த நிலையில் திடீரென கீதாசிங்கின் உடம்பு குண்டாகி விட்டது. ஹார்மோன் பிரச்சினைதான் இதற்குக் காரணமாம். இதையடுத்து ஹீரோயின் வாய்ப்புகள் போயின. எனவே காமெடி பக்கம் திரும்பினார் கீதா.

பிசியான காமெடி நடிகை
தெலுங்கில் மிகவும் பிசியான காமெடி நடிகையாக இருக்கிறார் கீதா சிங். குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாமல் இவரைப் பார்க்க முடியும்.

தமிழிலும் இப்போது...
தற்போது ஒன்பதுல குரு படத்தில் வினய்யின மனைவியாக வந்து காமெடியில் கலக்கியிருக்கிறார் கீதா. இதையடுத்து அவருக்கு தமிழ்ப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்துள்ளதாம்.

கோவை சரளாவுடன்...
தெலுங்கில் கோவை சரளாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள கீதா சிங்குக்கு, சரளாதான் மானசீக குருவாம். அவருடன் இணைந்து தமிழிலும் நடிக்க ஆசையாக இருக்கிறாராம்.
பிறகென்ன, இருவரும் இணைந்து, டபுள் பேரல் காமெடித் துப்பாக்கியாக துளைத்தெடுங்கட்டும் ரசிகர்களின் இதயங்களை...!


Click it and Unblock the Notifications











