தெலுங்கு நடிகையை காணவில்லை... தந்தை புகார்!
ஹைதராபாத்: தெலுங்கு பட நடிகை சாய் ஸ்ரீ ஷா மாயமாகிவிட்டதாக அவரது தந்தை ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
லவ் அட்டாக் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் ஸ்ரீ ஷா. இவரை கடந்த மே மாதம் இறுதியில் இருந்து காணவில்லை என்று பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையில் ஸ்ரீஷாவின் தந்தை பிரசாத் ராவ் புகார் அளித்துள்ளதார்.
சாய் ஸ்ரீஷாவின் வீடு பஞ்சாரா ஹில்ஸ் ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ளது.

மே கடைசியில்
ஸ்ரீஷா கடந்த மே 27ம் தேதி தனது ஆண் நண்பருடன் வீட்டை விட்டு போனவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.

செல்போனில் பேச்சு
ஆனால் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய நடிகை கடந்த 10 நாட்களாக எந்தவித தொடர்பும் கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.

போலீசில் புகார்
இதனால் பதற்றமடைந்து போலீசில் புகார் அளித்துள்ளதாக ஸ்ரீஷாவின் தந்தை தெரிவித்தார். இதனையடுத்து ஸ்ரீஷா அவரது ஆண் நண்பர் முரளியின் செல்போன் எண்களை போலீசார் பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சீரியல் நடிப்பு
ஸ்ரீஷா இப்போது தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











