ஆமாம் கடிச்சேன்... ஏன் கடிச்சேனு அவருக்கு தெரியும்... நடிகரின் கையை கடித்த நடிகை!
ஆந்திரா : தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலின் போது நடிகர் பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிவ பாலாஜியின் கையை நடிகை ஹேமா கடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
தெலுங்கு நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில், பிரகாஷ் ராஜ் தலைமையிலான ஒரு அணியும், நடிகர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டனர்.

தெலுங்கு நடிகர் சங்கத்தேர்தல்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தெலுங்குத் திரைப்பட நடிகர் சங்கத்துக்கான தேர்தல் பிரச்சாரங்கள் இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதையடுத்து, தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் நேற்று பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடந்து முடிந்தது.

பிரகாஷ் ராஜ் அணி
பிரகாஷ்ராஜுக்கு நாகர்ஜுனா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்டோர் ஆதரவளித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணு மஞ்சுவுக்கு என்டிஆர் குடும்பத்தினர் ஆதரவு அளித்தனர். விஞ்சு மஞ்சு பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் ஆவார்.

விஷ்ணு மஞ்சு வெற்றி
நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்தது. இதில் தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். அவர் பிரகாஷ்ராஜை விட கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றார். இது தவிர மற்ற பதவிகளிலும் நடைபெற்ற தேர்தலில் விஷ்ணு மஞ்சு அணியினர் வெற்றி பெற்றனர்.

சிவந்து போன கை
இந்நிலையில், பிரகாஷ் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் சிவ பாலாஜியின் கையை நடிகை ஹேமா திடீரென கடித்தார். இதையடுத்து சிவ பாலாஜியின் கை அப்படியே சிவந்து காணப்பட்டது இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கையை கடித்து விட்டு ஹேமா படபடவென அங்கிருந்து வெளியேறினார்.

ஆமாம் கடிச்சேன்
இதுகுறித்து ஹேமாவிடம் கேட்ட போது, ஆமாம் கடித்தேன், காரணம் இல்லாமல் யாராவது கையை கடிப்பாங்களா... நீங்களே அவரிடம் காரணத்தை கேளுங்கள் என்று கூறினார். இதுகுறித்து சிவ பாலாஜியிடம் கேட்ட போது, அவங்க ஏன், என் கையை கடித்தாங்க என்று எனக்கு தெரியாது என்று கூறினார்.

வைரலாகும் வீடியோ
இருவரும் மாறி மாறி இப்படி கூறி வருவதால் ஹோமா கையை கடித்ததற்கான காரணம் கடைசி வரை தெரியாமலே போய் விட்டது. இருப்பினும் சிவ பாலாஜியின் கையை ஹேமா கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











