இப்போ பரவாயில்லை.. அந்த நோயில் இருந்து தப்பிச்சிட்டேன்.. தெலுங்கு நடிகை பெருமூச்சு!

ஹைதராபாத்: 'பிரயாணம்' படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பயல் கோஷ்.

லாக்டவுன் நேரத்தில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பயல் கோஷ், அந்த நோயில் இருந்து தான் விடுபட்டு விட்டதாகவும், தற்போது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் தேரோடும் வீதியிலே என்கிற ஒரு படத்திலும் நடித்திருந்தார் பயல் கோஷ். ஆனால், அந்த படம் திரைக்கு வராமல் அப்படியே டிராப் ஆனதால், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடியாமல் போனது.

கொரோனா அலை

கொரோனா அலை

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மற்ற நோய்களாலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதித்து வருகின்றனர். லாக்டவுன் காரணத்தால் பலருக்கும் உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. மேலும், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மற்ற நோய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.

மலேரியா பாதிப்பு

மலேரியா பாதிப்பு

தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகை பயல் கோஷ், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்ட பயல் கோஷ், அதன் பாதிப்புகளால் மனதளவில் உடைந்து போனதாகவும், தற்போது முழுவதுமாக அதில் இருந்து மீண்டுள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். நல்ல வேளை கொரோனா பாதிப்பு இல்லை என்பது பெரிய நிவாரணமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.

இன்ஸ்டா டார்லிங்

இன்ஸ்டா டார்லிங்

30 வயதாகும் இந்த பிராயணம் பட நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மோனோகினி, பிகினி, சேலை மற்றும் மாடர் டிரெஸ் என பல உடைகளில் கவர்ச்சி ததும்ப ததும்ப எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ரிஷி கபூருடன்

ரிஷி கபூருடன்

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நடித்து வந்த பயல் கோஷுக்கு 2014ம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஃப்ரீடம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், அதற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த நிலையில், மறைந்த நடிகர் ரிஷி கபூர், பரேஷ் ராவல் நடிப்பில் வெளியான பட்டேல் கி பஞ்சாபி ஷாதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Recommended Video

Rx100 Payal Rajput extremely Glamour Dance | RX 100 Karthikeya
உலக சினிமா பார்க்குறேன்

உலக சினிமா பார்க்குறேன்

ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், ரொம்பவே அச்சப்பட்டேன். பின்னர், தனக்கு மலேரியா என்று தெரிந்ததும், கவலை இல்லாமல், அதற்கான ட்ரீட்மென்ட்டை எடுத்துக் கொண்டேன். இந்த லாக்டவுனால் கிடைத்துள்ள இந்த நேரத்தை உலக சினிமா பார்ப்பதிலும், புத்தகங்கள் வாசிப்பதிலும் செலவிட்டு வருகிறேன் என பயல் கோஷ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X