நான் 25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன்..என் மானமே போச்சு.. மன உளைச்சலில் ஸ்ரீரெட்டி!
சென்னை: என்னை 25பேர் ஏமாத்தி இருக்காங்க, நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரைத்துறையில் இருப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டை கூறி திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
அதற்காக அவர் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமானார்

நடிகை ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி சமூகவலைதள பக்கத்தில் #METOO புகார்களை பதிவிட்டு வந்தார். தெலுங்கு திரையுலகம் மட்டுமில்லாமல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீதும் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி. ஆனால் நடிகை ஸ்ரீரெட்டி விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் கூறிவந்தனர்.

அன்னைக்கே எல்லாம் போச்சு
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் என்னைக்கு சட்டையை கழட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தினேனோ அன்னைக்கே எல்லாம் போச்சு. அம்மா முன்பு கூட ஆடை மாற்றாத நான், அன்று அத்தனை பேர் முன்னிலையில் எப்படி சட்டையை கழட்டி ஆர்ப்பாட்டம் செய்தேன் என்று தெரியவில்லை. என் அம்மா, அப்பா, தம்பி அனைவரும் என்னிடம் பேசுவது இல்லை மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.

எல்லாம் கனவாகிவிட்டது
எந்த கவலையும் இல்லாமல் என் அம்மா என்னை பார்த்து பார்த்து வளர்த்தார்கள். அம்மா மேல கால் போட்டு தூங்கும் போது மொத்த கவலையும் பறந்து போகும். ஆனால், அது கனவாகிவிட்டது, அந்த தருணத்தை அடிக்கடி நினைத்து பார்த்து மனதிற்குள் வருத்தப்படுகிறேன். சினிமாவில் நடிக்க வருபவர்கள் கிளாமர் ரோல்ல நடிக்கனும்னு வராதீங்க. அம்மா சொல்வதை கேளுங்க.

25 பேர் கிட்ட ஏமாந்திருக்கிறேன்
நான் 25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன். அவங்க எல்லோருமே சினிமாவில் மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் , எழுத்தாளர்கள். நான் இளம் நடிகைகளுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான் கதைக்கு தேவை என்றால் மட்டும் நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள். ஆடியோ வெளியீட்டு விழா, ஃபோட்டோ ஷூட்டிற்கு எல்லாம் கவர்ச்சி தேவையில்லை. என்னை நினைத்தா எனவே மிகவும் அவமானமாக இருக்கு என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











