ஆப்பரேசனுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்! சமந்தா தான் உதவினார்! சீக்ரெட் உடைத்த நடிகை!

சென்னை: டிபி நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஒருவர் தனக்கு நடிகை சமந்தா உதவி செய்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார்.

அடுத்து பாலிவுட் படங்களிலும் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா. டாப்ஸி தயாரிக்கும் பாலிவுட் படத்தில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விவகாரத்து அறிவிப்பு

விவகாரத்து அறிவிப்பு

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர்.
அதன்பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதுவும் பேசாமல் உள்ள நடிகை சமந்தா அண்மையில் வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு தனது தோழியுடன் ஆன்மிக சுற்றுலா சென்றார்.

பாராட்டிய நடிகர்

பாராட்டிய நடிகர்

அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா ஏழை குழந்தைகள் கல்வி பயிலவும் உதவி செய்து வருகிறார். சமந்தவின் உதவி செய்யும் மனப்பான்மையை நடிகர் பவன் கல்யாண் கூட சமீபத்தில் பாராட்டினார்.

நடிகைக்கு உதவிய சமந்தா

நடிகைக்கு உதவிய சமந்தா

இந்நிலையில் சமந்தா மூலம் உதவி பெற்ற நடிகை ஒருவர் சமந்தா குறித்து நெகிழ்ந்துள்ளார். அதாவது தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை தேஜஸ்வி மாதிவாடா. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

அனாதையாக வளர்ந்தேன்

அனாதையாக வளர்ந்தேன்

இந்நிலையில் நடிகை தேஜஸ்வி மாதிவாடா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, சிறுவயதிலேயே தாயை இழந்து விட்டேன். தந்தையும் குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன்.

சமந்தாதான் உதவி காப்பாற்றினார்

சமந்தாதான் உதவி காப்பாற்றினார்

இந்த நேரத்தில்தான் எனக்கு 'டிபி' நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் நடிகை சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார். இவ்வாறு நடிகை தேஜஸ்வி மாதிவாடா கூறியுள்ளார்.

ஜீவனாம்ச தொகையை உதறிய சமந்தா

ஜீவனாம்ச தொகையை உதறிய சமந்தா

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்யும் நாக சைதன்யா அவருக்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுப்பதாக நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் முன் வந்தனர். ஆனால் தான் நன்றாக சம்பாதிப்பதால் தனக்கு பணம் வேண்டாம் என கூறிவிட்டார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X