பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் விஷ்ணு விஷால் தோழி, பவர் ஸ்டாரின் முன்னாள் மனைவி?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Contestants: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மைனா,ப்ரியங்கா?.. சமூக வலைதளங்களில் வைரல்- வீடியோ

ஹைதராபாத்: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரின் முன்னாள் மனைவி, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கலந்து கொள்ளப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்குகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் ஜூலை மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழை போன்றே தெலுங்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போகிறவர்கள் என்று கூறி சிலரின் பெயர்கள் அடிபடுகிறது.

அதில் சம்பந்தப்பட்ட சிலரோ நான் ஒன்றும் பிக் பாஸ் 3 வீட்டிற்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

நாகர்ஜுனா

நாகர்ஜுனா

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். முதல் சீசனை தொகுத்து வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர். திரும்பி வருவார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எப்படியாவது ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ அழைத்து வாங்க பிக் பாஸ்காரு என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வீணாகிவிட்டது.

ரேணு தேசாய்

ரேணு தேசாய்

பிரபல தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ரேணு தேசாய் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த அவரோ, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் அதில் கலந்து கொள்ளும் வகை நான் இல்லை என்கிறார் ரேணு தேசாய்.

உதய பானு

உதய பானு

பிரபல தெலுங்கு நடிகை உதய பானுவை பிக் பாஸ் 3 வீட்டிற்கு வருமாறு அழைத்தார்களாம். ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டாராம். தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டால் தனது மகள்கள்(இரட்டையர்கள்) கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர் பிக் பாஸ் அழைப்பை ஏற்கவில்லையாம். மேலும் மகள்களுடன் நேரம் செலவிட வசதியாக அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம்.

ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டா

பேட்மிண்டன் வீராங்கனையும், நடிகர் விஷ்ணு விஷாலின் தோழியுமான ஜுவாலா கட்டாவின் பெயரும் பிக் பாஸ் தொடர்பாக அடிபட்டது. அந்த தகவல் அவருக்கு தெரிய வர, நான் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்து தேவையில்லாத பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரஷ்மி கவுதம்

ரஷ்மி கவுதம்

பிரபல நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ரஷ்மி கவுதம் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு சீசனின் போதும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைக்கிறார்கள். நான் தான் முடியாது என்று கூறிக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு ஒத்து வராது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X