பிக் பாஸ்: சோனா முத்தா அங்கேயும் போச்சா?
ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் படுத்துவிட்டதாம்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கி நடத்தி வருகிறார்கள். ஜூலை மாதம் 16ம் தேதி துவங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடத்தி வருகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை முமைத் கான் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார்.

பிக் பாஸ்
தமிழ் பிக் பாஸை விட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர். அங்குள்ள போட்டியாளர்களுக்கு சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது என்று முதலில் கூறப்பட்டது.

டிஆர்பி
தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் நிறைய பாசிட்டிவிட்டி இருப்பதாக பிரபலங்கள் கூட தெரிவித்தனர். இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி நாளுக்கு நாள் இறங்கு முகமாகவே உள்ளதாம்.

போர்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு போரான டாஸ்க்குகள் கொடுப்பதே டிஆர்பி இறங்க காரணமாம். வீட்டில் உள்ளவர்களும் எதையும் சுவாரஸ்யமாக செய்வது இல்லை என்று கூறப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர்
வார இறுதி நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்கு ஜூனியர் என்.டி.ஆர். வரும்போது கூட டிஆர்பி ஏறுவது இல்லையாம். அதே சமயம் நடிகர் ராணா நடத்தும் நம்பர் ஒன் யாரி நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











