அடுத்தது என்ன என்பதை காண காத்திருங்கள்.. திடீரென வெளியான பிக்பாஸ் 4 புரமோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் செம ஜாலிகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளது.

திரைத்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் அதனை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களிலும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தி டீசர்

இதனால் சீரியல் உட்பட சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 14க்கான டீசர் கடந்த வாரம் வெளியானது.

பாலிவுட்டுக்கு பின்னடைவு

பாலிவுட்டுக்கு பின்னடைவு

கடந்த சீசனை போலவே இந்த சீசனையும் பாலிவுட் தாதாவான சல்மான் கானே தொகுத்து வழங்கவுள்ளார். சுஷாந்த் மரண வழக்கால் பாலிவுட் சினிமாவே அல்லோகளப்பட்டுள்ளது. தொடரும் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மரணமும் இந்தி வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கவலைப்படாத கான்

கவலைப்படாத கான்

குறிப்பாக சுஷாந்த் மரணத்திற்கு சல்மான் கானும் ஒரு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மும்பையில் உள்ள அவரது ஷாப்புக்கு முன்னால் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உற்சாகமாக பிக்பாஸ் 14 நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் பணியில் இறங்கியுள்ளார் சல்மான் கான்.

நடிகர் நாகர்ஜூனா

நடிகர் நாகர்ஜூனா

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகள் ஒரு பக்கம் நடைபெற தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணியும் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சீசன் 4 புரமோ

சீசன் 4 புரமோ

இதற்கான டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் கிரே ஹேரில் கண்ணில் கண்ணாடி, கழுத்தில் ஸ்கார்ப், கையில் பைனாகுலர் என எதையோ பார்த்து கோபி என குலுங்கி குலுங்கி சிரிக்கிறார் நாகார்ஜூனா.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க காத்திருங்கள் !!! என முடிகிறது அந்த புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் புரமோவையும் மறு பக்கம் நாகார்ஜூனாவையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X