தமிழ் பிக்பாஸ் மேடையில் தோன்றிய நாகார்ஜூனா.. தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளரை காப்பாற்றிய கமல்!
சென்னை: கமலின் பிறந்த நாளை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நாகார்ஜூனா அந்த மேடையில் இருந்து வாழ்த்து தெரிவித்தார்.
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கமலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இன்ப அதிர்ச்சிகளை கொடுத்தது நிகழ்ச்சி குழு.

நாகார்ஜூனா வாழ்த்து
அந்த வகையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நாகர்ஜூனா அந்த மேடையில் இருந்து நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழில் வாழ்த்து கூறினார். அதற்கு கமல் நன்றி கூற அதன் பிறகு இருவரும் தொடர்ந்து தெலுங்கு மொழியில் பேசிக் கொண்டனர்.

காப்பாற்ற வேண்டும்
நீங்கள் நல்லா இருக்கிங்களா? உங்கள் ஹவுஸ்மேட்ஸ் எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டார். அதற்கு ஹவுஸ்மேட்டுகளிடம் கேக்குதா என்றார் கமல். அப்போது நாகார்ஜூனா, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் நாமினேஷனில் உள்ள 5 பேரில் உங்கள் பிறந்தநாளில் ஒரு போட்டியாளரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார் நாகார்ஜூனா.

காப்பாற்றப்பட்ட ஆரிக்கா
இதனை தொடர்ந்து போட்டியாளரின் பெயரை காண்பித்தார்.
அதனை உற்று உற்று பார்த்த கமல், 5 பேரையும் காப்பாற்ற ஆசைதான் ஆனால் இது விளையாட்டு.. இதை விளையாடிதான் ஆக வேண்டும் என்று கூறி நாகார்ஜூனா காட்டிய ஆரிக்கா என்ற பெயரை அறிவித்தார் கமல்.

உங்கள் வாழ்க்கைக்கும்
தொடர்ந்து பேசிய நாகார்ஜூனா நீங்கள் சில வார்த்தைகள் பேசினால் நாங்கள் விடை பெற்றுக் கொள்வோம் என்றார்.
அதனைக் கேட்ட கமல்.. நன்றாக விளையாடுங்கள். இந்த விளையாட்டு உங்கள் வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கும் என ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் பேசினார் கமல்.

சல்யூட் அடித்த நாகார்ஜூனா
ஆந்திராவும் தமிழ்நாடும் கைக்குலுக்கியது பார்த்திருப்பீர்கள். இதன்மூலம் 4 கோடி மக்கள் ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லிக் கொண்டார்கள் என்றார். மேலும் நாகார்ஜூனாவுக்கு கைகளை கூப்பி நன்றி கூறினார் கமல். கமலுக்கு சல்யூட் அடித்து விடைபெற்றார் நாகார்ஜூனா.


Click it and Unblock the Notifications











