அதிர்ச்சி... பேரிழப்பு.. பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் உறைந்த தெலுங்கு சினிமா!
சென்னை: பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் பிஆர்ஓவான பாபுராஜுவின் திடீர் மறைவு தெலுங்கு சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் பிஆர்ஓவாகவும், பத்திரிக்கையாளர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்தவர் பாபு ராஜு.
நேற்றிரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவருக்கு வயது 57. அவருடைய மறைவை அவரது மகனான பி ஷிவகுமார் உறுதி செய்துள்ளார்.

மனைவி மரணம்
2018 ஆம் ஆண்டு தனது மனைவியான இயக்குநர் ஜெயாவை இழந்தார் பாபு ராஜு. அதன் பிறகு ஷிவகுமார் மற்றும் அருண் குமார் ஆகிய 2 மகன்களுடன் வசித்து வந்தார் பாபு ராஜு.

பிரபலங்கள் இரங்கல்
இந்நிலையில் அவருடைய திடீர் மரணம் தெலுங்கு சினிமாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மகேஷ் பாபு, பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கொடூரமான செய்தி
நடிகை ரகுல் பிரீத் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு கொடூரமான செய்தியோடு எழுந்துள்ளேன்! பி.ஏ.ராஜுகாரு நீங்கள் மிஸ் பண்ண படுவீர்கள். என்னுடைய பல படங்களுக்கு அவர் பிஆர்ஓவாக இருந்துள்ளார். அவர் மிகவும் இதமான மனிதர், எப்போதும் அவரது முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. தெலுங்கு சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.. குடும்பத்திற்கு ஸ்ட்ரென்த் கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

டோலிவுட்டுக்கு பேரிழப்பு
நடிகை ஆத்மிகா பதிவிட்டுள்ள டிவிட்டில் பாபு ராஜு இல்லை என்பதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். டோலிவுட்டுக்கு பேரிழப்பு. ரிப் சார் என பதிவிட்டுள்ளார்.

திடீர் மறைவு
நடிகை க்ரித்தி ஷெட்டி பதிவிட்டுள்ள டிவிட்டில் சீனியர் தெலுங்கு பிஆர்ஓவான பா ராஜு காரு திடீர் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். ரிப் சார். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இதேபோல் ஜூனியர் என்டிஆர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பி.ஏ.ராஜு காருவின் திடீர் மறைவு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் மூத்த திரைப்பட பத்திரிகையாளர் & பிஆர்ஓவாக அவர் திரைப்படத் தொழிலுக்கு பெரிதும் பங்களித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் எனது ஆரம்ப நாட்களிலிருந்து நான் அவரை அறிந்திருக்கிறேன். இது ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்திற்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன். ஆன்மா சாந்தியடையட்டும் ராஜு காரு என பதிவிட்டுள்ளார்.

மறைவை ஏற்க முடியவில்லை
நடிகர் மகேஷ் பாபு பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், பிஏ ராஜுகாருவின் மறைவை ஏற்க முடியவில்லை. என் குழந்தை பருவத்தில் இருந்து அவரை எனக்கு தெரியும். பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்துள்ளோம். அவருடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

பெரும் துயரம்
நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ள பிஏ ராஜு காரு மறைவு செய்தியை கேட்டு பெரும் துயரம் அடைந்துள்ளேன். தெலுங்கு சினிமாவுக்கு பேரிழப்பு... அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் ஷாந்தி என பதிவிட்டுள்ளார்.

என் குடும்பத்தில் ஒருவர்
இதேபோல் நடிகர் பிரபாஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் பிஆர்ஓ பிஏ ராஜுகாரு மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவர் என் குடும்ப உறுப்பினர் போன்றவர். என்னுடைய கேரியரில் பல படங்களுக்கு அவருடன் பணியாற்றியுள்ளேன். அவருடனான அனுபவத்தை என்றும் மதிக்கிறேன். இது தெலுங்கு சினிமா இன்டஸ்ட்ரிக்கு பேரிழப்பு.. அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











