தெலுங்கு த்ரிஷ்யம் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதில் தாமதம்.. தயாரிப்பு நிறுவனம் தந்த விளக்கம்

சென்னை : நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டடித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் மலையாளத்தில் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே அமோக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி காலை 10.08 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாவதில் சிக்கல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆர்வமாக ரீமேக் செய்தனர்

ஆர்வமாக ரீமேக் செய்தனர்

மிகக்குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் மலையாளத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தின் வெற்றியை பார்த்த மற்ற மொழி திரைத்துறையினரும் இந்த படத்தை ஆர்வமாக ரீமேக் செய்தனர் அந்த வகையில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி சிங்களம் மற்றும் சீன மொழிகளிலும் கூட இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி கண்டது.

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

த்ரிஷ்யம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் அதன் இரண்டாவது பாகத்தையும் விறுவிறுப்பாக இயக்கி முடித்தார். த்ரிஷ்யம் 2 கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. த்ரிஷ்யம் இரண்டாவது பாகத்தையும் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது அந்த வகையில் முதல் ஆளாக தெலுங்கு ரீமேக் தற்போது தயாராகி வருகிறது.

த்ரிஷ்யம் 2 ஃபர்ஸ்ட் லுக்

த்ரிஷ்யம் 2 ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் வெங்கடேஷ் இதில் ஹீரோவாக நடிக்க மீனா ஜோடியாக நடிக்கிறார். நதியா, சம்பத் குமார்,கிருத்திகா,எஸ்தர் அனில்,நரேஷ் உள்ளிட்டோர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷ்யம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 20-ம் தேதி காலை 10.08 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது

இன்று வெளியாகவில்லை

இன்று வெளியாகவில்லை

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி காலை 10.08 மணிக்கு மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெளியாகவில்லை. அதற்கு விளக்கம் தரும் வகையில் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

வெளியாவதில் தாமதம்

வெளியாவதில் தாமதம்

எதிர்பாராத சில சூழ்நிலைகள் காரணமாக த்ரிஷ்யம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும். என தெலுங்கு த்ரிஷ்யம் 2 தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரோடக்சன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதை பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் என்றாலும் இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X