Animal - அனிமல் படத்தில் நடித்திருந்தால் அப்படி இருந்திருக்கும்.. நானியின் ஆசையை பாருங்க

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் அனிமல். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மொத்தம் 900 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் படமாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண் ரசிகைகளையும் பெற்றுக்கொடுத்தது. மேலும், தமிழில் ஆதித்ய வர்மா எனவும், ஹிந்தியில் கபிர் சிங் என்ற பெயரிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தின் மூலமே ஹிட் இயக்குநர் என்ற பெயரை எடுத்துவிட்டார் வங்கா.

Telugu Famous Actor Nani Talks about Animal Movie

ஹிந்தியில் சந்தீப்: சந்தீப் ரெட்டி கடைசியாக ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குல்ஷன்குமார் மற்றும் டி - சீரிஸ் நிறுவனமும், முராத் கெடானியின் சினி 1 ஸ்டூடியோஸ் மற்றும் பிரனாய் ரெட்டி வான்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்தனர்.

மோசமான விமர்சனம்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு திரைப்படம் வெளியானது. ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் நல்ல விமர்சனத்தை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. படத்தை ரசிகர்களில் பெரும்பாலானோர் மோசமாக விமர்சித்தனர். அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் நிறைந்த காட்சிகள் என்று கழுவி கழுவி ஊற்றினர். ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் மோசமான விமர்சனத்தையே முன்வைத்தனர்.

பிரபலங்கள் விமர்சனம்: அனிமல் படத்தை பார்த்த பின்னணி பாடகி ஸ்ரீநிவாஸ் அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல் திரைப்படம் என்று வெளுத்து வாங்கினார். அதேபோல் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த ராதிகா ஒரு படத்தை பார்த்து வாந்திதான் வந்தது என்று ட்வீட் செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் ராதிகா அனிமல் படத்தைத்தான் இப்படி விமர்சிக்கிறார் என்று கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

அனிமல் 2: இப்படி பலரும் படத்தை கழுவி ஊற்றினாலும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. அதேபோல் பிலிம்பேர் விருதுகள் விழாவில் மொத்தம் 6 விருதுகளை அனிமல் அள்ளியிருக்கிறது. அதனை கவனித்த ரசிகர்கள் என்னது இது இவ்வளவு மோசமான படத்துக்கு ஆறு விருதுகளா என்று சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

நானியின் ஆசை: இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் நானி அளித்த சமீபத்திய பேட்டியில், "எனக்கு எப்போதுமே சவாலான் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வம் அதிக இருக்கிறது. ஒருவேளை அனிமல் படம் அதே அழுத்தமான கதாபாத்திரத்துடன் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நான் அதில் நடித்திருப்பேன். அப்படியான ஒரு கதையில் நான் நடிக்கும் விதம் கண்டிப்பாக ரன்பீர் கபூர் நடித்ததைவிட வேறுபட்ட ஒன்றாக இருந்திருக்கும். இந்த மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது அதில் ஒரு தனித்துவமான ஆற்றல் வெளிப்படும் என்பதை நம்புகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X