சமந்தாவின் விவாகரத்து.. சரியாகச் சொன்ன ஜோசியர்.. நாக சைதன்யாவின் புது வாழ்க்கை குறித்து போஸ்ட்!
ஹைதராபாத்: தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்திய திரையுலகிலேயேயும் இன்றைக்கு மிகவும் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டு இருப்பது என்னவென்றால், அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் தொடர்பாகத்தான். கடந்த சில தினங்களாகவே இது தொடர்பான தகவல்கள் இணையத்திலும் பல்வேறு ஊடகங்களிலும் உலா வந்தாலும், இன்றைக்கு காலையில் இருந்து அதிகம் பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக இன்று அதாவது ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் நிச்சய்தார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைதன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பல கோடிகள் தொகையையும் சமந்தா வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, விவாகரத்து கொடுத்தார்.

இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து ஊடகங்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டபோதும் கூட, இருவரும் மறுப்பு தெரிவிக்காமல், வெறுமனே புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து நழுவி வந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறுள்ளது.
சோபிதா துலிபாலா: சோபிதா துலிபாலா நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னர், மாடலாக இருந்து இந்தியாவின் திரை உலகினரின் கவனத்தைப் பெற்றார். 2013ஆம் ஆண்டு சோபிதா ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சோபிதா தற்போது, மிகவும் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.

ஜோசியர்: இந்நிலையில் தெலுங்கு சினிமா உலகில் மிகவும் முக்கியமான நபராகப் பார்க்கப்படுபவர், ஜோசியர் வேணு சுவாமி. இவர் தெலுங்கு சினிமா உலகில் மட்டும் இல்லாமல் ஆந்திராவிலேயே மிகவும் பிரபலமான ஜோசியராகப் பார்க்கப்படுகின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், " நாளை நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் ஜாதகங்களை ஆய்வு செய்து, அவர்களுக்கான எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது என கூறப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா விவாகரத்து: ஜோசியர் வேணு சுவாமியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. இவர் ஏற்கனவே நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்யவுள்ளனர் என கணித்துச் சொன்னவர். இதனாலேயே இவர் நாளை என்ன சொல்லப்போகின்றார் என்ற ஆவல் அனைவருக்கும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











