Love Today Telugu: தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த லவ் டுடே.. பிரதீப்பை தூக்கிக் கொண்டாடிய ரசிகர்!
சென்னை: இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் தமிழில் வெளியாகி 70 கோடி வசூலை கடந்த நிலையில், இன்று தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
தியேட்டர் முழுக்க இளைஞர்கள் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விசில் சத்தத்தை தெறிக்கவிட்டு கொண்டாடினர்.
படம் முடிந்து வெளியே வந்த ரசிகர் ஒருவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை தூக்கிக் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

செல் போன் மாத்திக்கலாமா
இன்றைய கால இளைஞர்கள் பாத்ரூமுக்கு போனாலும் செல்போன் கையுமாக செல்வதையே டாய்லெட்டில் நாயகியின் இன்ஸ்டாகிராம் உலகத்திற்கு நாயகன் பயணிப்பது போன்ற காட்சிகளை வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பல்ஸையும் பிடித்து விட்டார் பிரதீப் ரங்கநாதன். தமிழில் படத்துக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு இன்று தெலுங்கில் வெளியான லவ் டுடே படத்திற்கும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

விசில் சத்தம்
படம் ஆரம்பித்து முடியும் வரை தியேட்டரில் இளைஞர்களின் விசில் சத்தம் காதை கிழித்தன. அந்த அளவுக்கு காமெடி காட்சிகளுக்கும் லவ் போர்ஷனுக்கும் செல்போனை இருவரும் மாற்றிக் கொண்ட பிறகு நடக்கும் களேபரங்களை கண்டு ரசித்த தெலுங்கு ரசிகர்கள் விசிலடித்தும், கைதட்டியும் சிரிப்பு சத்தத்தாலும் தியேட்டரை அலற விட்டனர்.

தெறிக்கும் டிரெண்டிங்
#LoveTodayTelugu ஹாஷ்டேக்கை டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டு தெலுங்கு சினிமா ரசிகர்கள் லவ் டுடே படத்தை தியேட்டரில் கொண்டாடிய காட்சிகளை ஷேர் செய்துள்ளனர். படம் ரொம்பவே சூப்பரா இருக்கு என்றும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் படம் இது என்றும் பாசிட்டிவான விமர்சனங்கள் அங்கேயும் குவிந்து வருகின்றன.

பிரதீப்பை தூக்கிய ரசிகர்
படம் பார்த்து முடிந்ததும் வெளியே வந்து படம் வேறலெவல் என சொல்லிட்டு இருந்த ரசிகர் ஒருவர் திடீரென தியேட்டரை விட்டு பிரதீப் ரங்கநாதன் வெளியே வந்ததும் அவரை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு கொண்டாடும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே அவருக்கு மாநிலம் கடந்த அன்பும் பாசமும் கிடைத்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

பிரதீப் செம ஹாப்பி
லவ் டுடே திரைப்படம் வெறும் 5 கோடியில் எடுக்கப்பட்டு 70 கோடி ரூபாய் வசூல் செய்து சாதித்த நிலையில், தெலுங்கிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்பதை அறிந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் பொழிந்த அன்பு மழையில் நனைந்து செம ஹாப்பி ஆகி உள்ளார். பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











