பிரபல நடிகை 3 முறை கருக்கலைப்பு செய்ததாகப் பகீர் புகார் சொன்னவர்.. 'தியாக ஸ்டார்' திடீர் கைது!

By

ஐதராபாத்: பிரபல நடிகைகள் தன்னை காதலித்துவிட்டு பிறகு ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் கூறிய 'தியாக ஸ்டார்' கைது செய்யப்பட்டார்.

தமிழில், சசிகுமாரின் பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.

சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார்.

சைபர் கிரைம் போலீஸ்

சைபர் கிரைம் போலீஸ்

இப்போது அதர்வாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், அங்கு பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சுனிசித் என்ற யூடியூப் நடிகர் மீது சைபர் கிரைம் போலீஸில் பரபரப்பு புகார் கொடுத்தார். சுனிசித், யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

கருக்கலைப்பு செய்தார்

கருக்கலைப்பு செய்தார்

அதில், லாவண்யா திரிபாதி, தமன்னா உட்பட சில நடிகைகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதோடு லாவண்யா தன்னைத் திருமணம் செய்துகொண்டார் என்றும் மூன்று முறை அவர் கருக்கலைப்பு செய்தார் என்றும் பின்னர் லாவண்யா, என்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து விட்டார் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோ டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முன்னணி ஹீரோக்கள்

முன்னணி ஹீரோக்கள்

இதுமட்டுமின்றி, சுகுமார் இயக்கத்தில் பிரபல ஹீரோ மகேஷ்பாபு நடித்த நேனொக்கடைன் படத்தின் கதை தனக்காக உருவாக்கப்பட்டது என்றும் அதில் தான் தான் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தேன் என்றும் சொன்னார். பிறகு பாகுபலி படத்திலும் தான் நடிக்க வேண்டியது என்றும் கூறி பரபரப்பாக்கினார். பிறகு தனக்கு வந்த பல வாய்ப்புகளை முன்னணி ஹீரோக்கள் பறித்துக்கொண்டார்கள் என்றும் சொன்னார்.

சைபர் கிரைமில் புகார்

சைபர் கிரைமில் புகார்

இதையடுத்து சோசியல் மீடியாவில் அவரை, தியாக ஸ்டார் (Sacrifice Star) என்று அழைக்கத் தொடங்கினர். அவர் சொன்ன 'கதைகள்' சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபர் தன்னைப் பற்றி கேவலமான, பொய்யான கருத்துகளை தெரிவித்துள்ளதாக, நடிகை லாவண்யா திரிபாதி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதிரடியாக கைது

அதிரடியாக கைது

இதுபற்றி, சைபர்கிரைம் உதவி கமிஷனர் கேவிஎம் பிரசாத் கூறும்போது, புகாரை பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தியாக ஸ்டார் சினிசித்தை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X