அடக்கடவுளே.. ரிலீசுக்கு முன்பே லீக்கான பிரபல நடிகர்களின் படங்கள்.. பயங்கர அப்செட்டில் படக்குழு!

சென்னை: புஷ்பா படத்தின் படக்காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு பயங்கர அப்செட்டில் உள்ளது.

தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜூன் லீடிங் ரோலில் நடிக்கிறார்.

மேலும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

செம்மரக் கடத்தல் குறித்து..

செம்மரக் கடத்தல் குறித்து..

புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. ராயலசீமா மற்றும் ஆந்திர மாநில மலைப் பகுதியான சேஷாச்சலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மரக் கடத்தல்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வரும் டிசம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

250 கோடி ரூபாய் செலவில்

250 கோடி ரூபாய் செலவில்

இந்தப் படம் 250 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

ரிலீஸுக்கு முன்பே லீக்கான காட்சிகள்

ரிலீஸுக்கு முன்பே லீக்கான காட்சிகள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தின் பெரும்பாலான காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழு பயங்கர அப்செட்டில் உள்ளது.

சர்காரு வாரி பாட்டா பட காட்சிகள்

சர்காரு வாரி பாட்டா பட காட்சிகள்

இதே போல் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் காட்சிகளும் இணையத்தில் லீக்காகி உள்ளது. அண்மையில் இப்படங்களின் டீசர் மற்றும் பாடல் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் லீக்காகி அதிர்ச்சி

இணையத்தில் லீக்காகி அதிர்ச்சி

இந்நிலையில் தற்போது இரண்டு படங்களின் காட்சிகளும் இணையத்தில் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளது.

நாங்கள் மிகவும் கலங்கியுள்ளோம்

நாங்கள் மிகவும் கலங்கியுள்ளோம்

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், "ஆன்லைனில் சமீபத்தில் எங்கள் திரைப்படப் மெட்டீரியல்கள் கசிந்ததால் நாங்கள் மிகவும் கலங்கியுள்ளோம். நாங்கள் அதைக் கண்டித்து, சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளோம். குற்றவாளிகள் விரைவில் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள். தயவுசெய்து திருட்டை ஊக்குவிக்காதீர்கள்," என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X