ரத்தக் கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்.. படக்காட்சிகளை இணையத்தில் லீக் செய்த இயக்குநர்.. கொடுமை!

சென்னை: ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது என்பது மிகவும் சவாலான காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுவும் ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்யும் சவாலை ஒரு குழுவினராக மொத்த படக்குழுவும் அரும்பாடு பட்டாலும், அதிக அதிகப்படியான ரிஸ்க் எடுப்பவர்களாக இருப்பது என்பது, தயாரிப்பாளர்கள் மட்டும் தான். ஒரு சில நடிகர்கள் படத்தில் நடிப்பதுடன் தனது வேலை முடிந்தது, புரோமோசனுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என நடந்து கொள்ளும் நடிகர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, தெலுங்கு படமான G.O.A .T படத்தின் நடிகர் சுதீர் படத்தின் புரோமோசனுக்கு வராதது குறித்து தயாரிப்பாளர் மிகவும் மன வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

இயக்குநர் நரேஷ் குப்பிலி இயக்கத்தில் உருவாகி உள்ள G.O.A .T படத்தில் தெலுங்கு நடிகர் சுதிகாலி சுதீர் கதாநாயகனாகவும், திவ்ய பாரதி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சில மனக்கசப்புகளால், நடிகை திவ்ய பாரதிக்கும், இயக்குநர் நரேஷ் குப்பிலிக்கும் இடையே பெரிய பிரச்னையே ஏற்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், நடிகர் சுதிகாலி சுதீர் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்தார் திவ்ய பாரதி.

Telugu GOAT Movie Produces Express His Upset Actor Sudigali Sudheer Not Comes For Promotions
Photo Credit:

இயக்குநர் உடன் பிரச்னை: இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பெரிய பிரச்னை ஏற்பட, படத்தின் வெளியீட்டுக்கு சப்போர்ட் செய்யாமல், படத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறார், நரேஷ் குப்பிலி. இப்படி இருக்கும்போது, நடிகரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு முழு சப்போர்ட்டும் கொடுத்து படத்தின் புரோமோசனில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நடிகை திவ்ய பாரதி செயல்பட்டு வருகிறார். இப்படி இருக்கும்போது, படத்தின் டீசர் ரிலீஸின் போது, செய்தியாளர்கள் படத்தின் தயாரிப்பாளரிடம் ஏன் நடிகர் சுதீர் புரோமோசனுக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

தயாரிப்பாளர் வருத்தம்: அதாவது அவர் பேசுகையில், " நடிகர் சுதீரை நான் கதாநாயகனாக தேர்வு செய்ததற்கு காரணம், அவர் மிகவும் பொறுப்பானவர் என்பதுதான். மேலும், அவர் வந்த பின்னர் படத்தின் பட்ஜெட்டை மேலும் ஒரு கோடி அதிகரித்தேன். படத்தின் இயக்குநரே படக் காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தார். நான் சுதீருக்கு வைக்கும் கோரிக்கை என்றால் அது, அவர் இந்த படத்தை புரோமோட் செய்வதற்காக முன் வரவேண்டும் என்பதுதான்" என்று பேசினார். படத்தின் டீசர் வீடியோவில் இயக்குநரின் பெயரே இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவர்கள் நடிகர் இந்த அளவுக்கு நடந்து கொள்வது அவர் செய்யும் தொழிலுக்கே துரோகம் செய்வது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X