’காதல்’ படத்தில் மிஸ் பண்ணியதை மீண்டும் பிடிக்கணும்.. தமிழில் அறிமுகமாக பிரபல தெலுங்கு ஹீரோ முடிவு!

By

சென்னை: தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுவதாக பிரபல தெலுங்கு ஹீரோ தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்வரவாந்தி ரவி கிஷோரின் மருமகன்.

இவர் தேவதாசு என்ற படம் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானார்.

205 நாட்கள்

205 நாட்கள்

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. 17 சென்டர்களில் 175 நாட்கள் ஓடிய இந்தப் படம், ஐதரபாத் ஓடியன் தியேட்டரில் 205 நாட்கள் ஓடியது. இதையடுத்து சுகுமார் இயக்கிய ஜகடம் என்ற படத்தில் நடித்தார். இது சுமாராக ஓடியது. பின்னர், ஸ்ரீனு வைட்லா இயக்கிய ரெடி என்ற படத்தில் நடித்தார். இதில் ஜெனிலியா ஹீரோயின். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

உத்தமபுத்திரன்

உத்தமபுத்திரன்

இந்தப் படம் தமிழில் தனுஷ், ஜெனிலியா, விவேக் நடிப்பில் உத்தமபுத்திரன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. பின்னர் மஸ்கா, கண்டிரீகா, மசாலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த எண்டுகண்டே பிரேமந்தா என்ற படம் தமிழில் ஏன் என்றால் காதல் என்பேன் என்ற பெயரில் தமிழிலும் உருவானது. தமன்னா ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் ராஜ் இசை அமைத்திருந்தார். கருணாகரன் இயக்கி இருந்தார்.

தடம் ரீமேக்

தடம் ரீமேக்

இந்தப் படம் தெலுங்கில் சுமாராக ஓடியது. ஆனால், தமிழில் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ள ராம், கடைசியாக புரி ஜெகநாத் இயக்கிய ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது. இப்போது, தமிழில் வெளியான தடம் படத்தின் ரீமேக்கில் நடித்திருக்கிறார். தமிழில் இதில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். மகிழ்திருமேனி இயக்கி இருந்தார்.

நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ்

இந்தப் படத்துக்கு ரெட் என்று தெலுங்கில் டைட்டில் வைத்துள்ளனர். கிஷோர் திருமலா இயக்கும் இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், மாளவிகா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராம், நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க கவனம் செலுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sid Sriram Mesmerizing Voice | A.R.Rahman, Bombay, Malarodu Malaringu, Maniratnam
சென்னையில் வளர்ந்தவர்

சென்னையில் வளர்ந்தவர்

ஐதராபாத்தில் பிறந்திருந்தாலும் ராம், சென்னையில் படித்து வளர்ந்தவர். முதன்முதலாக 'அடையாளம்' என்ற தமிழ் குறும்படத்தில்தான் அவர் நடித்திருந்தார். இந்த படத்துக்கு விருதுகள் கிடைத்தன. பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தின் ஆடிஷனுக்கு இவர் சென்றிருந்தார். ஆனால், தேர்வாகவில்லை. இந்நிலையில், தனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால் தமிழில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதை அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X