பிரமோஷன் என்ற பெயரில் எல்லை மீறும் தெலுங்கு ஹீரோக்கள்… நடுரோட்டில் நடந்த பிராங்க்
ஹைதராபாத் : " Ashoka Vanamlo arjun kalyaanam " எனும் தெலுங்கு திரைப்படத்தின் பிரமோஷனுக்காக செய்த பிராங்க் வீடியோ விவாதமாக மாறி இருக்கிறது.
நடிகர் விஸ்வக் சென் கதாநாயகனாக நடித்து மே 6 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் " Ashoka Vanamlo arjun kalyaanam ".
இப்படத்தின் பிரமோஷனுக்காக அந்த படக்குழு செய்த ஒரு செயல் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

சர்ச்சை நாயகன்
2017ஆம் ஆண்டு ' Vellipomakey ' எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் விஸ்வக் சென். அதன் பின்னர் ' Falak nama das ', " Ee nagaraniki emaindhi ", ' Hit ' போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் வெறும் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் நடித்த ' falak nama das ' படத்தின் இயக்குனரும் இவரே. விஷ்வக்சென ஆரம்பத்தில் இருந்து இதுவரை பல விவாதங்களில் சிக்கியுள்ளார். சிலகாலம் முன்பு விஜய் தேவரகொண்டா தன்னை வளர விடாமல் தடுக்கிறார் என்று பொது மேடைகளில் சொல்லி வந்தவர் இவர். அவருக்கு நேரடியாக மிரட்டல் விடவும் செய்தார். தனது படம் ரிலீசாகும் வேலையில் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளம்ப கூடியவர். தற்போது இவர் படம் ரிலீசாக இருப்பதால் படத்திற்கு பிரமோஷன் செய்வதற்காக இவர்கள் செய்த ஒரு பிராங்க் வீடியோ அதைத் தொடர்ந்து எழுந்த விவாதம் ஆந்திரா முழுவதும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

புதுவித பிரமோஷன்
விஷ்வக் சென் கதாநாயகனாக நடிக்கும் " Ashoka Vanamlo arjun kalyaanam " திரைப்படம் வரும் 6ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதால் படத்தில் பல பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக விஸ்வக் சென் மெயின் ரோட்டில் வரும்போது ஒருவர் கையில் பெட்ரோல் உடன் அவர் காரை மறித்து பிரச்சினை செய்வதுபோல பிராங்க் ஷோ திட்டமிட்டு அதை செயல் படுத்தி உள்ளனர். ஆனால் இந்த பிராங்க் ஷோ வைரலானது மட்டுமில்லாமல் பல பிரச்சினைகளை கிளப்பி இருக்கிறது. பிராங்க் வீடியோ வைரலானது அதையே கன்டன்ட் ஆக வைத்து ஒரு நியூஸ் சேனல் நடிகர் விஸ்வக் சென் சேனை அழைத்து விவாதம் ஆக்கினர்.

விஸ்வக் சென் vs தொகுப்பாளர் தேவி
படத்தின் பிரமோஷன் என்ற பெயரில் இதுபோன்ற செயல்கள் செய்வது சரியா என்பதுபோல ஆரம்பமான விவாத மேடை ஒரு கட்டத்தில் பெரிய அளவில் உருவெடுத்து, அந்த நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர் தேவி நடிகர் விஸ்வக் சேனை ' கெட் அவுட்' என சத்தம் போட்டுள்ளார். இவர்கள் இருவர் மத்தியில் நடந்த விவாதத்தில் நடிகர் விஸ்வக் சென் " F..." எனும் கெட்ட வார்த்தையே உபயோகப்படுத்தி இருக்கிறார். விஸ்வக் சென் மற்றும் தொகுப்பாளர் தேவி மத்தியில் நடந்த விவாதம் ஆந்திரா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் பிரமோஷன் என்ற பெயரில் இப்படி செய்வதை அனுமதிக்க கூடாது என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அருண்குமார் எனும் வக்கீல் விஸ்வக் சென் மீது மனித உரிமை கவுன்சிலில் புகார் அளித்திருக்கிறார்.

ராம்கோபால் வர்மாவின் கருத்து
சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. தற்போது விஸ்வக் சென் மற்றும் தொகுப்பாளினி தேவி மத்தியில் நடந்த விவாதத்தை முன்னிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார். " ஒரு ஆணை விட பலசாலியாக ஒரு பெண் தோன்றுவதை நான் இதுவரை பார்த்ததில்லை. இவர் சர்க்கார் விடவும் குறைந்தவள் இல்லை" என தொகுப்பாளினி தேவியை குறிப்பிட்டு அவரது அக்கவுண்டை டேக் செய்து தனது பதிவை வெளியிட்டுள்ளார். தெலுங்கு ஹீரோக்கள் பிரமோஷன் என்ற பெயரில் எல்லை மீறி வருகின்றனர் என்ற பேச்சு வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











