இசை உலகின் இருண்ட நாள்.. முடிந்துப்போன இசை சகாப்தம்.. எஸ்பிபியின் மரணம்.. நடிகர் சிரஞ்சீவி உருக்கம்!

ஹைதராபாத்: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகின் இருண்ட நாள் என தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகரான எஸ்பிபியின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்பிபி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி

திரைத்துறை பிரபலங்களும் எஸ்பிபியின் மறைவு தொடர்பாக பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக தனது இரங்கலையும் தனது அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இருண்ட நாள்

இருண்ட நாள்

அவர் பதிவிட்டிருப்பதாவது, இசை உலகின் இருண்ட நாள்.. நிகரே இல்லாதே ஒரு இசை மேதை எஸ்பி பாலுகாரு.. ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். பாலுகாரின் குரலில் எனக்காக ஒலித்த பல பாடல்கள் என்னுடைய வெற்றிக்கு காரணம்.

மீண்டு பிறந்து வரவேண்டும்

மீண்டு பிறந்து வரவேண்டும்

அவருடைய குரல் பல கலாச்சாரங்களை தாண்டி இந்தியா முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளது. இன்னொரு எஸ்பிபி வரவே முடியாது. அவர் தான் மீண்டும் பிறந்து வந்து அவரது இடத்தை நிரப்ப வேண்டும். அவரது இழப்பால் நொறுங்கியுள்ளேன், உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் பாலு காரு. இவ்வாறு பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.

நம்பிய சிரஞ்சீவி

நம்பிய சிரஞ்சீவி

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதே தானும் எஸ்பிபியும் எவ்வளவு நெருக்கம் என்பதை வீடியோவாக வெளியிட்டு உருகியிருந்தார் நடிகர் சிரஞ்சீவி. சீக்கிரம் வாருங்கள் பாலுகாரு, நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X