நேரம் மாறலாம்.. காதல் எப்போதும் மாறுவதில்லை..அழகான தலைப்புடன்.. சிரஞ்சீவியின் ஸ்பெஷல் சேலஞ்ச் !
ஹைதராபாத் : இந்த கொரோனா வந்ததும் வந்துச்சி அனைவரும் விதவிதமான சேலஞ்சுக்கு ரெடியாகி வருகின்றனர். மெகா ஸ்டார் கொஞ்சம் ஸ்பெஷலான சேலஞ்சுக்கு தயாராகி உள்ளார்.
Recommended Video
சிரஞ்சீவியிடம் கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு முன் சமையலறையில் சமைத்தவாரு எடுத்த ஒரு போட்டோவில் அவருடைய மனைவியுடன் இருப்பார். அதை ரீகிரியேட் செய்யும் வகையில் இந்த லாக்டவுனில் அவர் சுவாரஸ்யமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நேரம் மாறலாம் ஆனால் காதல் எப்போதும் மாறுவதில்லை என சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பல நடிகர்கள் இந்த சேலன்ஜ்ஜில் பங்கேற்றனர். ஆண்கள் அனைவரும் சமையல் போட்டியில் கலந்து கொண்ட இந்த நேரத்தில் நடிகைகள் அனைவரும் தலையணையை கட்டிக்கொண்டு சேலன்ஜ்ஜில் பங்கேற்று வருகின்றனர் .

பரிட்சியமான முகம்
மெகா ஸ்டார் சிரஞ்சீவி இவர் தெலுங்கு திரைப்படத்துறையை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான முகம். தமிழில் நிறைய படங்களில் தோன்றியிருப்பார் குறிப்பாக ரஜினியின் மாப்பிள்ளை படத்தில், ரஜினியின் நண்பனாக வருவார். தெலுங்கு ஹீரோவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படுவதில் இவருக்கு முன்னுரிமைதான் .

பத்திரப்படுத்திய போட்டோ
1990களில் சிரஞ்சீவி மிகவும் பிஸியாகயிருந்த நேரம் அடுத்துத்தடுத்த படங்களில் நடித்து கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் தனது மனைவி சுரேகாவிற்கு சமையலில் உதவி செய்வது போன்று ஒரு புகைப்படம் எடுத்து வைத்து இருந்தார். அதில் இருவரும் சமையலறையில் இருப்பது போன்றும் அதில் சிரஞ்சீவி சமைப்பது போன்றும் மேலும் சிரஞ்சீவி ப்ளூ டீசர்ட், ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருப்பார், அவரின் மனைவி சிவப்பு நிற சேலை அணிந்திருப்பார். அந்த போட்டோவை மிகவும் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார் இவரது மனைவி.

பலவித சேலஞ்ச்
இந்தியாவில் லாக்டவுன் ஆரம்பித்த உடனேயே ஆண்களும், பெண்களும் பல்வேறு சேலஞ்சுகளை எடுத்து அதை சிலர் சமூகவலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இன்னும் சில திரைபிரபலங்கள் " பி எ ரியல் மென் " எனும் சேலஞ்ச் மூலம் தங்களது வீட்டை முழுவதும் தானே சுத்தப்படுத்தப்படுத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். இயக்குனர் ராஜமௌலி, ஜூனியர் NTR, ராம் சரண், சிரஞ்சீவி என பலரும் இந்த சேலஞ்சில் பங்கேற்றனர்.

மறுபடியும் சமையலா?
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு குக்கிங் சேலஞ்ச் எடுத்துத் அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது 1990ல் அவர் எடுத்த பழைய புகைப்படத்தைப் போல பகிர்ந்து. அதே போல, இப்போதும், ப்ளூ டீசர்ட், ப்ளூ ஜீன்ஸ் அணிந்தும், அவரின் மனைவியும் சிவப்பு நிற சேலை அணிந்து கொண்டும் சமையல் அறையில் சமைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காதல் எப்போதும் மாறாது
அதே சமையல் காட்சியை 30 வருடங்களுக்கு பிறகு எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் கீழ் கேப்ஷனாக நேரம் மாறலாம் ஆனால் காதல் எப்போதும் மாறுவதில்லை என லாக்டவுன் டைம்மில் ஜாலியாக இந்த இரண்டு போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார் நமது மெகா ஸ்டார். இதனை பார்த்த நமது ரசிகர்கள் பல சூப்பர் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்,.

பெஸ்ட் மெமரீஸ்
சிரஞ்சீவியின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர். எது எப்படியோ இந்த லாக்டவுன் முடிந்த பின்னரும் நம் பெண்களுக்கு இது போன்ற சிறு சிறு வீட்டு வேலைகளை தொடர்ந்து செய்து கொடுப்பது நமது கடமையாகும் மேலும் நமக்கு அது ஒரு பெஸ்ட் மெமரீசாக இது இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











