இந்திய படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. பாராட்டு சொன்ன தெலுங்குப்பட நாயகன் மகேஷ்பாபு!

ஐதராபாத் : ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்துள்ளது.

80வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நகரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், கீரவாணி உள்ளிட்டவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர்.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சுதந்திர போராட்ட காலத்தை முன்வைத்து எடுக்கப்பட்டது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சர்வதேச அளவில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம்


படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒலிவியா மோரீஸ் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் முக்கியமான கேரக்டரில் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட காலகட்டத்தை நம்முடைய கண் முன்னே கொண்டு வந்திருந்தார் ராஜமௌலி.

சர்வதேச அங்கீகாரம்

சர்வதேச அங்கீகாரம்

இந்தப் படம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இதன்மூலம் கோல்டன் க்ளோப் விருதை பெற்றுள்ள முதல் ஆசிய பாடல் என்ற பெருமையையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.

கோல்டன் க்ளோப் விருது பெற்ற பாடல்

கோல்டன் க்ளோப் விருது பெற்ற பாடல்

80வது கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நகரில் நடைபெற்ற நிலையில், சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் பெற்றுள்ளது. இதற்கான விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மகேஷ் பாபு பாராட்டு

மகேஷ் பாபு பாராட்டு

இதனிடையே தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக போற்றப்படும் மகேஷ்பாபுவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு இந்தியப் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது கனவு நனவான தருணம் என்று அவர் பாராட்டியுள்ளார். மேலும் இந்த ஆண்டு இதைவிட சிறப்பாக துவங்கியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X